22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

'ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!' – ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி

Date:

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.

“அரைவேக்காட்டுத் தனமாக” இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா ஸ்டாலின் அவர்களே? ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!

ஸ்டாலின்

தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே… இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே? மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப் படுத்தவில்லை!

நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர்! “நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்” என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை! நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன?

இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்? எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் “பெட்டி” மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா? ஆக, “ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்” என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் திரு. ஸ்டாலின்.” எனக் குறிப்பிட்டுள்ளார்,

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗസ അനുകൂല പ്രതിഷേധം: പ്രോസിക്യൂഷന് തിരിച്ചടി; വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്കെതിരായ ക്രിമിനല്‍ കേസുകള്‍ ഒഴിവാക്കി

കാലിഫോര്‍ണിയ: ഗസയില്‍ ഇസ്രഈല്‍ നടത്തുന്ന ആക്രമണങ്ങളില്‍ സ്റ്റാന്‍ഫോര്‍ഡ് സര്‍വകലാശാലയില്‍ പ്രതിഷേധിച്ച അഞ്ച്...

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6...

TGPSC Syllabus Changes: సిలబస్‌ మార్పులపై TGPSC కీలక ప్రకటన..

TGPSC Syllabus Changes: తెలంగాణ పబ్లిక్ సర్వీస్ కమిషన్ (TGPSC) సిలబస్‌...

റോഡിന് വീതി കൂട്ടല്‍: അനധികൃത നിര്‍മാണമാരോപിച്ച്‌ കെട്ടിടങ്ങള്‍ പൊളിച്ചുനീക്കി ദല്‍ഹി പൊലീസ്

ന്യൂദല്‍ഹി: റോഡിന് വീതി കൂട്ടുന്നതിന്റെ ഭാഗമായി തെക്കന്‍ ദല്‍ഹിയിലെ ഛത്തര്‍പൂര് പ്രദേശത്തെ...