13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

“உச்ச நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வாதாட நீதியரசர்கள் துணை நிற்க வேண்டும்'' – முதல்வர் ஸ்டாலின்

Date:

திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் மன்னார்குடி நகரச் செயலாளர் வீரா.கணேசன், இவரது தம்பி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன் இல்ல திருமணம் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேசர். உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின்

துரை.சந்திரசேகரன் பேசும் போது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் ஒன்று அதிமுகவிடம் உள்ளது. வரும் தேர்தலில் எட்டு தொகுதியிலும் வெற்றி பெற்று வரலாறு படைப்போம்” என்றார்.

திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் ஸ்டாலின் பேசியதாவது, “கழகத்தின் இரு தூண்களில் ஒரு தூண் துரை.சந்திரசேகரன், மற்றொரு தூண் வீரா.கதிரவன். ஐந்தாவது முறை எம்.எல்.ஏவாக இருக்கும் துரை.சந்திரசேகரன் மக்கள் செல்வாக்கை பெற்றவர். குடும்பத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் பெருமை சேர்ப்பவர். இதே போல் மன்னார்குடி நகரச்செயலாளராக ஐந்தாவது முறை இருப்பவர் வீரா.கணேசன். ஒரு முறை இருப்பதே கடினம். ஐந்தாவது முறை இருக்கும் அவர் சமார்த்தியமானவர்.

உச்ச நீதிமன்றம்

இங்கு நீதியரசர்கள் தமிழில் பேசினார்கள். உச்ச நீதிமன்ற நீதியர்சர்கள் பலர் தமிழகத்திற்கு வரும் போது நாங்கள் கேட்டு கொள்வது உச்ச நீதிமன்ற வழக்காடு மொழி தமிழில் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாம் கோரிக்கை வைத்து வருகிறோம்.

கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் போது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். நீதி வழங்ககூடிய அந்த தீர்ப்பு தமிழில் வழங்கக்கூடிய சூழல் பெற்றுள்ளோம். உச்ச, உயர் நீதிமன்றங்களில் தமிழில் வாதாட கூடிய சூழலை உருவாக்கி தர வேண்டும். எங்களது இந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு நீதியரசர்கள் துணை நிற்க வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಅಡಿಕೆ ಕಳ್ಳತನ ಮಾಡಿದ್ದ ಮೂವರು ಕಳ್ಳರು ಅಂದರ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,12,2026 (www.justkannada.in): ಸುಮಾರು 15 ಕ್ವಿಂಟಾಲ್ ನಷ್ಟು ಅಡಿಕೆಯನ್ನು ಕಳ್ಳತನ...

ഞെട്ടിപ്പിക്കുന്ന സംഭവം, ഉടന്‍ സമഗ്രമായ അന്വേഷണം നടത്തണം; ഫാറൂഖ് അബ്ദുല്ലക്ക് നേരെയുണ്ടായ വധശ്രമത്തില്‍ എം.എ. ബേബി

ന്യൂദല്‍ഹി: ജമ്മു കശ്മീര്‍ മുന്‍ മുഖ്യമന്ത്രി ഫാറൂഖ് അബ്ദുല്ലക്ക് നേരെയുണ്ടായ വധശ്രമം...

'6 தொகுதிகள் கொடுத்தே ஆகணும்' – கறார் காட்டும் கம்யூனிஸ்டுகள்; கைவிரித்த திமுக!

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது....