26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

“Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? அடுத்தது ஆடு, மாடுகளுக்கு மாநாடு" – சீமான்

Date:

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று.

நாதக’வின் உழவர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பிறகு பேசியிருக்கும் சீமான், “சீமான் ‘கள்’ விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? என்று கேட்க தோன்றுகிறது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை?; தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு சாராய ஆலை கணக்கில்லாமல் உள்ளதுதான் காரணம்.

கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்

முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு

தைப்பூசத்திற்கு முருகனுக்கு தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அதைச் செய்யமாட்டார். ஏனென்றால் அவரின் தாய்மொழி அது அல்ல.

அவர் கோயிலில் வேறுமொழியில் குடமுழுக்குச் செய்தால் நான் அங்கேயே ஒருஇடத்தில் தமிழில் குடமுழுக்குச் செய்வேன். என் முப்பாட்டன் முருகன் பேரனுக்காக இறங்கி வருகிறானா, இல்லை ஊரானுக்காக இறங்கி வருகிறானா என்று பார்ப்போம்.

கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்

ஆடு, மாடுகளுக்கு மாநாடு

ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடமில்லாமல் போய்விட்டது. வனப் பாதுகாப்புச் சட்டம் என்று மலைகளில் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்குத் தடைபோடுகிறார்கள். ஆனால், குவாரி என்ற பெயரில் மலைகளை வெட்டி விற்கிறார்கள். அந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிய அடுத்ததாக ஆடு, மாடுகளுக்கு ஒரு மாநாடு, போராட்டம் நடத்தப்போகிறேன்.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എസ്.ഐ.ആര്‍ ഒരുവര്‍ഷം പിന്നിട്ടപ്പോള്‍ വോട്ടര്‍ പട്ടികയില്‍ നിന്ന് പുറത്താക്കിയത് ആറ് കോടിയോളം വോട്ടര്‍മാരെ

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ തീവ്ര വോട്ടര്‍ പട്ടിക പുനപരിശോധന (എസ്.ഐ.ആര്‍) ഒരു വര്‍ഷം...

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட...

Saikrishna Lockup Death: సాయికృష్ణ లాకప్ డెత్ కేసులో సిట్ దూకుడు.. మరో ఇద్దరు పోలీసుల కోసం గాలింపు!

విజయవాడలో సంచలనం సృష్టించిన సాయికృష్ణ లాకప్ డెత్ కేసు దర్యాప్తును ప్రత్యేక...

ಟೌನ್ ಶಿಪ್ ಹೆಸರಿನಲ್ಲಿ ರೈತರಿಂದ ಭೂಮಿ ಕಸಿದುಕೊಳ್ಳುವುದು ತಪ್ಪು- ಪ್ರತಾಪ್ ಸಿಂಹ

ಹಾಸನ,ಜೂನ್,26,2026 (www.justkannada.in):  ಬಿಡದಿಯ ಟೌನ್ ಶಿಪ್ ನಿರ್ಮಾಣ ವಿಚಾರ ಜಟಾಪಟಿ...