2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' – நயினார் நாகேந்திரன்

Date:

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயத்திற்குச் செலவு செய்துள்ளார்கள்.

நயினார் நாகேந்திரன்

நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சி, ஆதாரமாக இருக்கும் விவசாயம், ரயில், விமான போக்குவரத்து என உலக அளவில் பேசப்படுகிற அளவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை மோடி தந்திருக்கிறார்கள்.

மேலும், உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தை நான்காவது நாடாக உயர்த்திய பெருமை மோடி அவர்களையே சாரும். கடந்த 11 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சம் கோடி நிதி தனியாகக் கொடுத்துள்ளார்கள்.

எங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்கும் மதவாதம் இல்லை. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள். இந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை. இந்து என்ற மதம் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிதான் அமையும். அந்தக் கூட்டணி இ.பி.எஸ் தலைமையில் அமையும்.

நயினார் நாகேந்திரன்

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதைப்பற்றி இப்போது பேச முடியாது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிறைய பேர் வருவார்கள். மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അവര്‍ക്ക് ഹൃദയാഘാതം ഉണ്ടാകാതിരിക്കട്ടെ; ശത്രുക്കള്‍ ഭയക്കുന്ന ഒരായുധം, അത് അവരുടെ തൊട്ടടുത്തുണ്ട്; മുന്നറിയിപ്പുമായി ഇറാന്‍

ടെഹ്‌റാന്‍: അമേരിക്കയും ഇറാനും തമ്മിലുള്ള നയതന്ത്ര ചര്‍ച്ചകള്‍ പൂര്‍ണമായും വഴിമുട്ടിയതോടെ, പുതിയ...

தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' – எச்சரிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

தேர்தல் பிரசாரத்திற்காகக் குழந்தைகளை உணர்வு ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக்...

Story Board : ఒంటరి పోరాటమా.. అంతర్గత వైఫల్యమా? విపక్షాల బలహీనతకు అసలు కారణం రాహులేనా?

రాహుల్ గాంధీ కాంగ్రెస్ ను మాత్రమే కాకుండా.. మొత్తంగా ప్రతిపక్షాన్నే బలహీనపరుస్తున్నారు....

ಕಾರ್ಮಿಕರು ದೇಶದ ಆರ್ಥಿಕ  ಸಾಮಾಜಿಕ, ಅಭಿವೃದ್ಧಿಯ ಶಿಲ್ಪಿಗಳು- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು, ಮೇ,1,2026 (www.justkannada.in): ಕಾರ್ಮಿಕರು ದೇಶದ ಆರ್ಥಿಕ  ಸಾಮಾಜಿಕ, ಅಭಿವೃದ್ಧಿಯ...