14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

MUDA வழக்கில் அடுத்த திருப்பம்; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம்; ED சொல்லும் கணக்கு என்ன?

Date:

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) இழப்பீடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

இதில், சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரிக்க, மறுமுனையில் அமலாக்கத்துறையும் விசாரணையை மேற்கொண்டது.

சித்தராமையா

இந்த வழக்கில், இதுவரையில் சுமார் ரூ. 300 கோடி சந்தை மதிப்புள்ள 160 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது சித்தராமையாவுக்குத் தொடர்புடைய சுமார் ரூ. 100 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், “சித்தராமையா மற்றும் பிறர் தொடர்புடைய முடா ஊழல் வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் 09-06-2025 அன்று சுமார் ரூ.100 கோடி சந்தை மதிப்புள்ள 92 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்கில், இதுவரையில் மொத்தமாக ரூ. 400 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன” என்று பதிவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Sachin Tendulkar: సచిన్ రిటైర్మెంట్ వెనుక ఇంత కథ ఉందా.. డ్రెస్సింగ్ రూంలోనే ప్లాన్..?

క్రికెట్ ప్రపంచంలో ‘దేవుడు’గా పిలవబడే సచిన్ టెండూల్కర్ పేరు వినగానే పరుగుల...

ಭೀಕರ ಅಪಘಾತದಲ್ಲಿ ಮೂವರು ಸಾವು.

ಮಂಗಳೂರು, ಮಾರ್ಚ್,13,2026 (www.justkannada.in): ಕೆಎಸ್ ಆರ್ ಟಿಸಿ ರಾಜಹಂಸ ಬಸ್...

ഗസയിലെ വംശഹത്യ; ഐ.സി.ജെയിലെ കേസില്‍ കക്ഷി ചേര്‍ന്ന് നെതര്‍ലാന്‍ഡ്‌സും ഐസ്‌ലാന്‍ഡും

ഹേഗ്: ഗസയില്‍ ഇസ്രഈല്‍ നടത്തുന്ന വംശഹത്യ സംബന്ധിച്ച് ഹേഗിലെ അന്താരാഷ്ട്ര നീതിന്യായ...

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! – `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை…' – வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை...