23
November, 2026

A News 365Times Venture

23
Monday
November, 2026

A News 365Times Venture

'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' – வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

Date:

கர்நாடகாவில் ஹூப்பள்ளி – ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக்கும் பயணிகள் சீட்டில் டிரைவர் தொழுகை செய்கிறார்.

பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே சில பேருந்துகள், மற்ற வாகனங்கள் போய்கொண்டிருப்பது தெரிகிறது.

அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளோ, டிரைவருக்காகக் காத்திருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவைப் பயணி ஒருவர்தான் எடுத்துள்ளார்.

கர்நாடகா பஸ் டிரைவர் – வைரல் வீடியோ

இந்த வீடியோ வைரலாக, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பொதுத்துறையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

அனைவருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றக் கூடிய உரிமை இருந்தாலும், அலுவலக நேரங்களில் இது செய்வது தவறு.

பயணிகள் எல்லாம் காத்திருக்க, சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு, தொழுகை செய்தது ஆட்சேபனைக்கக் கூடியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜீவனாம்சம் எப்போது கேட்கலாம்? கணவரும் ஜீவனாம்சம் கேட்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? – 19

“கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். வருமானமும் இல்லை. விவாகரத்து வழக்குத் தொடர்ந்தால்தான் ஜீவனாம்சம்...

Sharwa : డబ్బులు పెట్టి వ్యూస్ కొనుక్కునే స్థితిలో మేము లేము.. ‘భోగి’ వేదికపై శర్వానంద్ సంచలన వ్యాఖ్యలు!

చార్మింగ్ స్టార్ శర్వానంద్ హీరోగా, సంపత్ నంది దర్శకత్వంలో వస్తున్న పీరియాడిక్...

ഇന്ത്യ ഹിന്ദു രാഷ്ട്രം: മദ്രസകളില്‍ പഠിപ്പിക്കുന്നത് ഹിന്ദു വിരോധം മാത്രം: മുസ്‌ലിങ്ങള്‍ക്ക് വസ്തുവകകള്‍ വില്‍ക്കരുത്: മഹാരാഷ്ട്ര മന്ത്രി

മുംബെ: മഹാരാഷ്ട്രയിലെ ജനസംഖ്യാ മാറ്റങ്ങള്‍ നിരീക്ഷിക്കണമെന്നും വസ്തുവകകള്‍ സ്വന്തം സമുദായത്തിലുള്ളവര്‍ക്ക് മാത്രമാണെന്നും...

அமெரிக்க பங்குச்சந்தை சரிவு, ஈரான் தாக்குதல்: ஜனநாயகக் கட்சி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது குறித்து அமெரிக்க...