27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

தூத்துக்குடி: 4 முறை பேச்சுவார்த்தை தோல்வி; 5-வது நாளாக அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டம்!

Date:

தூத்துக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான  என்.டி.பி.எல் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு இரண்டு அலகுகள் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு  300 பெண் ஊழியர்கள் உள்பட 1,370 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இங்கு பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

வேலை நிறுத்த போராட்டம்

இதனைத் தொடர்ந்து என்.எல்.சி-யில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 17-ம் தேதி முதல் என்.டி.பி. எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியடைந்த நிலையில், இன்று 5-வது நாளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளைச்செயலாளர் அப்பாத்துரையிடம் பேசினோம், “என்.டி.பி.எல் நிர்வாகம், உடனடியாக தங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யக்கூடாது.  கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.   

இப்போராட்டம் காரணமாக அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.90 கோடி  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . எனவே உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ട്രംപ്-ഷി കൂടിക്കാഴ്ച: വ്യാപാര യുദ്ധത്തിന് താത്ക്കാലിക ശമനം; 30 ബില്യണ്‍ ഡോളറിന്റെ താരിഫ് ഇളവിന് ധാരണ

വാഷിങ്ടണ്‍: അമേരിക്കയും ചൈനയും തമ്മിലുള്ള വ്യാപാര സംഘര്‍ഷത്തിന് താത്ക്കാലിക ശമനമെന്ന് റിപ്പോര്‍ട്ട്....

`மகனுடன் சேர்ந்து ஏரி மண் திருட்டு' – திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

கடந்த 14-12-2025 அன்று, தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்கான...

Off The Record: ఖైరతాబాద్‌లో పొలిటికల్ తలరాతలు తిరగబడే ముప్పు ముంచుకొస్తుందా..?

Off The Record: ఖైరతాబాద్‌ అసెంబ్లీ నియోజకవర్గానికి ఉప ఎన్నిక ఖాయమైంది....

സി.ജെ.പി നേതാവ് ആശുതോഷ് റങ്ക അസമില്‍ കസ്റ്റഡിയില്‍; മുഖ്യമന്ത്രിയ്ക്ക് ഭയമാണെന്ന് പാര്‍ട്ടി

ഗുവാഹത്തി: കൊക്രോച്ച് ജനതാ പാര്‍ട്ടി കോ-കണ്‍വീനര്‍ ആശുതോഷ് റങ്ക പൊലീസ് കസ്റ്റഡിയില്‍....