14
February, 2025

A News 365Times Venture

14
Friday
February, 2025

A News 365Times Venture

Arvind Kejriwal : `இது அமைதியைக் கெடுக்கும்…' – கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

Date:

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான தீவிரப் பிரசாரத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “பா.ஜ.க ஆளும் ஹரியானா அரசு, யமுனை நதி நீர் விநியோகத்தில் விஷம் கலந்து கொடுக்கிறது. டெல்லி சமீபகாலமாக மிகவும் மாசுபட்ட, மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரையே பெற்றுவருகிறது” எனக் குற்றம்சாட்டினார். ‘ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரில் அதிக அளவு அம்மோனியா இருக்கிறது’ என டெல்லி முதல்வர் அதிஷி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

தேர்தல் ஆணையம்

இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில், “யமுனை நதியிலிருந்து கொடுக்கப்படும் தண்ணீர் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்ற உங்கள் குற்றச்சாட்டுகள் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதாகவும், அமைதியைக் கெடுப்பதாகவும் தேர்தல் ஆணையம் கருதுகிறது.

முக்கிய அரசியல் தலைவராக, முன்னாள் முதலமைச்சராக உங்கள் இத்தகைய பேச்சுக்கள் ஏற்படுத்தக்கூடிய மோசமான விளைவுகளை, தேர்தல் ஆணையம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. இந்தப் பேச்சு இரண்டு மாநிலத்தின் மக்களுக்கு மத்தியில் நிரந்தர வடுக்களை ஏற்படுத்தக்கூடும். சம்பந்தப்பட்ட அனைத்து அரசுகளும் குடிமக்களுக்கு போதுமான, சுத்தமான தண்ணீரைப் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். எனவே, வெள்ளிக்கிழமைக்குள், உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.” எனக் கேட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶ: ಉತ್ಸಾಹದಿಂದ ಓಡಾಡಿದ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ

ಬೆಂಗಳೂರು, Feb.12,2025: ಜಾಗತಿಕ ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಬುಧವಾರ ದಿನವಿಡೀ ಬೃಹತ್...

മലയോര ഹൈവേ; 250 കി.മീ പണി പൂര്‍ത്തിയായി, ഒരു വര്‍ഷത്തിനകം 200 കി.മീ കൂടി; ആദ്യ റീച്ചിന്റെ ഉദ്ഘാടനം നാളെ

തിരുവനന്തപുരം: കാസര്‍ഗോഡ് ജില്ലയിലെ നന്ദാരപ്പടവ് മുതല്‍ തിരുവനന്തപുരം ജില്ലയിലെ പാറശ്ശാലവരെ നീളുന്ന...

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...

Lalu Prasad Yadav: “మా బావకు కిడ్నాపర్లలో సంబంధం”.. లాలూ బావమరిది సంచలన ఆరోపణ..

Lalu Prasad Yadav: లాలూ ప్రసాద్ యాదవ్‌పై ఆయన బావమరిది,...