14
February, 2025

A News 365Times Venture

14
Friday
February, 2025

A News 365Times Venture

வேங்கைவயல்: “அறிவியல் பூர்வமாக ஆய்வு… சாதிய காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல'' -தமிழக அரசு விளக்கம்!

Date:

“வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது” என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால், விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும்” எனக் கூறி இருந்தார்.

நீதிபதி நிர்மல் குமார் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி வேங்கைவயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்து வாதிடும்போது, “வேங்கைவயல் விவகாரம் சாதிய மோதல் அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்னை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து விசாரணை நீதிமன்றத்தில் தற்போது குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்து மூன்று நபர்களை குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர்.

வேங்கை வயல்

இந்த வழக்கை பொறுத்தவரை சிபிசிஐடி போலீசார், மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரனை மேற்கொண்டுள்ளனர், 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் 31 நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் அழிக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் நிபுணர் குழுக்களால் மீட்கப்பட்டு அறிவியல் ஆய்வக அறிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதேபோல் மேல் நிலை குடிநீர் தொட்டியிலிருந்து குற்றவாளிகள் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் அங்கிருந்து தொடர்பு கொண்ட மொபைல் போன் எண்கள் என அனைத்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பேசிய நபர்களின் ஆடியோக்கள் அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டது.

வேங்கைவயல்

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்ணீர் தொட்டிக்கு ஏறும் வரை அதில் எந்தவிதமான கழிவுகளும் கலக்கவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. சரியாக 7.35 மணிக்கு மேல்தான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு  தீவிர புலனாய்வு விசாரணை முடித்துவிசாரணை நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்”  என தெரிவித்தார்.

 இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶ: ಉತ್ಸಾಹದಿಂದ ಓಡಾಡಿದ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ

ಬೆಂಗಳೂರು, Feb.12,2025: ಜಾಗತಿಕ ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಬುಧವಾರ ದಿನವಿಡೀ ಬೃಹತ್...

മലയോര ഹൈവേ; 250 കി.മീ പണി പൂര്‍ത്തിയായി, ഒരു വര്‍ഷത്തിനകം 200 കി.മീ കൂടി; ആദ്യ റീച്ചിന്റെ ഉദ്ഘാടനം നാളെ

തിരുവനന്തപുരം: കാസര്‍ഗോഡ് ജില്ലയിലെ നന്ദാരപ്പടവ് മുതല്‍ തിരുവനന്തപുരം ജില്ലയിലെ പാറശ്ശാലവരെ നീളുന്ന...

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...

Lalu Prasad Yadav: “మా బావకు కిడ్నాపర్లలో సంబంధం”.. లాలూ బావమరిది సంచలన ఆరోపణ..

Lalu Prasad Yadav: లాలూ ప్రసాద్ యాదవ్‌పై ఆయన బావమరిది,...