12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?

Date:

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனை விதித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

சஞ்சய் ராய்

இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. நீதி கேட்டு மேற்குவங்க மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் எல்லாம் நடத்தினர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியிருந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103 (1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்

விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிந்தது. இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் திங்கள் கிழமை வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று ( ஜனவரி 20) நீதிமன்றம் சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும், சாகும் வரையில் சிறை எனும் ஆயுட்காலத் தண்டனையும் வழங்கி இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹಿರಿಯ ಪತ್ರಕರ್ತ ಕೆ ಜೆ. ಕುಮಾರ್ ನಿಧನ: ಇಂದು ಅಂತ್ಯಕ್ರಿಯೆ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,12,2026 (www.justkannada.in):  ನಿನ್ನೆ ಹೃದಯಾಘಾತದಿಂದ ನಿಧನರಾದ ಹಿರಿಯ ಪತ್ರಕರ್ತ ಕೆ...

മലയാളം എവിടെ? ചങ്ങനാശ്ശേരി റെയില്‍വേ സ്‌റ്റേഷനിലെ ഹിന്ദി ബോര്‍ഡിനെതിരെ സോഷ്യല്‍ മീഡിയ

കോട്ടയം: ചങ്ങനാശ്ശേരി റെയില്‍വേസ്റ്റ്ഷനിലെ പുതുക്കിയ പ്രവേശന കവാടത്തിലും കെട്ടിടത്തിലും ഹിന്ദിയില്‍ ബോര്‍ഡ്...

Suryakumar Yadav: డ్రెస్సింగ్ రూమ్ సీక్రెట్స్ బయటపెట్టిన సూర్య.. గంభీర్ స్పీచ్‌తో ప్లేయర్లలో పూనకాలు!

Suryakumar Yadav: భారత్ ప్రపంచ క్రికెట్‌లో ఆధిపత్యం చెలాయిస్తోంది. మూడు సార్లు...