ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தப்படி நேற்று (ஜனவரி 19) 3 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படிக்கும் முன், ‘பரிசு பை’ ஒன்று வழங்கப்பட்டது.
அக்டோபர் 7, 2023ல் தொடங்கிய போர் இறுதியாக முடிவை எட்டியிருக்கிறது. முதற்கட்டமாக விடுவிக்கப்படும் 3 பணயக் கைதிகள் ரோமி கோனென், எமிலி தமரி மற்றும் டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர் ஆவர்.
விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளை வரவேற்கும் வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (Israel Defence Force) வெளியிட்டுள்ளனர்.
“நாங்கள் இதற்காகத்தான் 471 நாள்கள் போரிட்டோம். வெல்கம் ரோமி கோனென், எமிலி தமரி மற்றும் டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர்” என அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Reunited at last. pic.twitter.com/l91srqby5c
— Israel Defense Forces (@IDF) January 19, 2025
இவர்களில் எமிலி மற்றும் டோரன் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் போது கடத்தப்பட்டனர். ரோமி கோனென் நோவா திருவிழாவின் போது கடத்தப்பட்டுள்ளார் என AFP செய்தி நிறுவனம் ‘பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போனோர் குடும்பங்கள் மன்றத்தை’ மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
பரிசு பையில் இருந்தது என்ன?
பணயக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்தின் காரில் ஏற்றப்படும்போது அவர்கள் கையில் ஒரு பேப்பர் பை வழங்கப்பட்டதும், அவர்கள் சான்றிதழ்களுடன் சிரித்த முகமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
Hamas made a propaganda film about the release of the three women they kidnapped over a year ago. They gave them ‘gift bags’ with certificates inside. Like they were on a student exchange from Hell. This is one of the SICKEST things I’ve ever seen. Monsters. pic.twitter.com/iuqlmi8D0c
— Heidi Bachram ️ (@HeidiBachram) January 19, 2025
போர் நிறுத்தம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் முதலில் ஒப்படைக்கப்பட வேண்டும். இதில் ஹமாஸால் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட முதல் 33 பேரில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 7 நாட்களில் இன்னும் 4 பேர் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் இன்னும் 16 நாட்களில் முடிவடையும். அதில் இஸ்ரேலிய ராணுவத்தினரும் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.