14
February, 2025

A News 365Times Venture

14
Friday
February, 2025

A News 365Times Venture

TVK: “அரிட்டாபட்டி நிலைபாட்டைத் தானே திமுக பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும்" – விஜய் ஆவேசம்

Date:

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வருகிறது என்றதும் தமிழ் வரலாற்றை அழிக்கும் முயற்சி என அரசியல் ரீதியாக மத்திய அரசை எதிர்க்கும் ஆளும் தி.மு.க, பரந்தூரில் மூன்றாண்டுகளாக மக்களின் போராட்ட குரல்களுக்குச் செவிசாய்க்காமல், விமான நிலையம் அமைப்பதில் மத்திய அரசுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான், 910 நாள்களாகப் போராடிவரும் 13 கிராம மக்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூரில் இன்று நேரில் சந்திக்க விரைந்தார்.

பரந்தூர் முதல் மேல்மா வரை

அதன்படி, பரந்தூருக்கு வந்த விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “910 நாள்களாக உங்கள் மண்ணுக்காக நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதைக் கேட்டேன். அந்த பேச்சு என் மனதை எதோ செய்துவிட்டது. உடனே உங்களைப் பார்க்க வேண்டும் எனது தோன்றியது, உங்களுடன் நிற்பேன் என்று சொல்லத் தோன்றியது. உங்களை மாதிரி விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டுதான் என்னுடைய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்றிருந்தேன். அதற்குச் சரியான இடம் இதுதான். என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

மாநில மாநாட்டில், நம் கட்சியின் கொள்கைகளில் ஒன்றுதான் இயற்கை வள பாதுகாப்பு. இதை ஓட்டு அரசியலுக்காக இங்கு சொல்லவில்லை. அதே மாநாட்டில், பரந்தூரில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தர வெள்ளக் காடாக்கும் இத்திட்டத்தை ஒன்றிய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதற்கெதிராக சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன் என்று கூறியிருந்தேன். அதை இங்கு அழுத்தமாக வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்னையில் உங்களுடன் உறுதியாக நிற்பேன்.

ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் நான் சொல்வது, நான் இங்கு வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. ஏர்போட் வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்த இடத்தில் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால், இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இங்கு விமான நிலையத்தை கொண்டுவரவேண்டும் என்று முடிவெடுப்பது எந்த அரசாக இருந்தாலும், அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.

அரிட்டாபட்டியில் எடுத்த அதே நிலைப்பாட்டைத் தானே பரந்தூர் பிரச்னையிலும் தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை. ஏனென்றால், இங்கு விமான நிலையத்தையும் தாண்டி இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டுவழிசாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதையே தானே இங்கேயும் செய்யவேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விசாயிகளுக்கு எதிர்ப்பா. நீங்கள் தான் நாடகமாடுவதில் கில்லாடியாச்சே. ஆனால், இனியும் மக்கள் உங்கள் நாடகத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

விமான நிலையத்துக்கு ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும், மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் அழிவு மக்களை அதிகம் பாதிக்கும். உங்கள் ஊர் எல்லையம்மன் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும் நானும், தவெக தோழர்களும், சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் உறுதியாக நிற்போம். ஏகனாபுரம் திடலில்தான் உங்களைப் பார்க்க நினைத்தேன். ஆனால், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஊருக்குள் வருவதற்கு எனக்கு ஏன் தடை என்று தெரியவில்லை. இப்படித்தான் கொஞ்ச நாள்களுக்கு முன் துண்டுச் சீட்டு கொடுத்ததற்குத் தடை விதித்தார்கள். அதுவும் ஏன் என்று தெரியவில்லை. எனவே உறுதியோடு இருங்கள், நல்லதே நடக்கும்” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Kishan Reddy: మాజీ సీఎం కేసీఆర్, సీఎం రేవంత్ రెడ్డిలకు కేంద్రమంత్రి సవాల్!

మాజీ సీఎం కేసీఆర్, సీఎం రేవంత్ రెడ్డిలకు కేంద్రమంత్రి కిషన్ రెడ్డి...

ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶ: ಉತ್ಸಾಹದಿಂದ ಓಡಾಡಿದ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ

ಬೆಂಗಳೂರು, Feb.12,2025: ಜಾಗತಿಕ ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಬುಧವಾರ ದಿನವಿಡೀ ಬೃಹತ್...

മലയോര ഹൈവേ; 250 കി.മീ പണി പൂര്‍ത്തിയായി, ഒരു വര്‍ഷത്തിനകം 200 കി.മീ കൂടി; ആദ്യ റീച്ചിന്റെ ഉദ്ഘാടനം നാളെ

തിരുവനന്തപുരം: കാസര്‍ഗോഡ് ജില്ലയിലെ നന്ദാരപ്പടവ് മുതല്‍ തിരുവനന്തപുരം ജില്ലയിലെ പാറശ്ശാലവരെ നീളുന്ന...

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...