16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

“14 ஆண்டுகால திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருகிறோம்" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்ஸி பதிவு!

Date:

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடனான திருமண உறவை முடிவுக்கு கொண்டுவருவதாக அவரின் மனைவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் வாழ்வில் பங்கெடுத்துக் கொண்ட பிறகு, அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த ஒரு பயணமாக இது இருந்துள்ளது.

நண்பர்களாக, வாழ்க்கைத் துணைவர்களாக மற்றும் பெற்றோர்களாக வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களை நாங்கள் ஒன்றாகக் கடந்து வந்துள்ளோம்.

இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனி பாதைகளில் பயணிக்க பரஸ்பரம் முடிவெடுத்துள்ளோம்.

டெய்ஸி அறிக்கை

இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்தாலும், இணைந்து குழந்தையை வளர்ப்பதிலும், எங்கள் குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதிலும் எங்களின் அர்ப்பணிப்பு எப்போதும் எங்களின் மிக முக்கிய முன்னுரிமையாக இருக்கும்.

ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும்; அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.

இந்த மாற்றத்தை நாங்கள் கடந்து செல்லும் வேளையில், உங்களின் புரிதல், அன்பு மற்றும் தனிமனித உரிமைக்கான (Privacy) மதிப்பை மனதாரக் கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ആമസോൺ സംരക്ഷകർക്ക് നീതി വേണം; വനനശീകരണത്തിനും ഖനനത്തിനുമെതിരെ ലിയോ പതിനാലാമൻ മാർപാപ്പ

പെറു: ആമസോൺ മഴക്കാടുകൾ സംരക്ഷിക്കുന്നതിനിടെ കൊല്ലപ്പെട്ട പരിസ്ഥിതി പ്രവർത്തകർക്ക് നീതി ലഭിക്കണമെന്ന്...

பிரேக் குறைபாட்டுடன் 463 கி.மீ தூரம் இயக்கப்பட்ட வந்தே பாரத்: விசாரணைக்கு உத்தரவு… என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குப் போதிய பிரேக் திறன் இல்லாமலேயே வந்தே...

AP Panchayat Elections: రెండో విడత పంచాయతీ ఎన్నికలకు నేడే నోటిఫికేషన్.. పూర్తి షెడ్యూల్ ఇదే!

AP Panchayat Elections: ఆంధ్రప్రదేశ్‌లో పంచాయతీ ఎన్నికల నిర్వహణకు ఎన్నికల సంఘం...