21
October, 2026

A News 365Times Venture

21
Wednesday
October, 2026

A News 365Times Venture

செஞ்சி சிறுமி மாயம்: “பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என்றவரின் பதில் என்ன?”- விஜய்க்கு கனிமொழி கேள்வி

Date:

பெருந்துறை செவிலியர் மற்றும் செஞ்சி சிறுமி சம்பவங்களைக் குறிப்பிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மறுபுறம், செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വഖഫ് ബോര്‍ഡ്: എ.പി വിഭാഗം പ്രതിനിധികള്‍ വരുമെന്ന് മന്ത്രി എന്‍. ഷംസുദ്ദീന്‍

തിരുവനന്തപുരം: വഖഫ് ബോര്‍ഡ് ഭരണ സമിതിയില്‍ എ.പി സമസ്ത വിഭാഗം പ്രതിനിധികള്‍...

"பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா? மீண்டும் தவறான முடிவு..!" – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு...

WPL 2027 Auction: 27 స్థానాల కోసం 146 మంది ప్లేయర్లు.. WPL వేలం తేదీ, వేదిక ఖరారు..!

WPL 2027 Auction: వుమెన్స్ ప్రీమియర్ లీగ్ (WPL) 2027 సీజన్‌కు...

ഫ്രാന്‍സിലെ പ്രക്ഷോഭം; പ്രതിഷേധക്കാരെ നേരിടാന്‍ സൈനിക വിഭാഗങ്ങളെ വിന്യസിക്കുമെന്ന് ആഭ്യന്തര മന്ത്രാലയം

പാരീസ്: ഫ്രാന്‍സില്‍ ഈ വാരാന്ത്യത്തില്‍ നടക്കാനിരിക്കുന്ന പ്രതിഷേധങ്ങളെ നേരിടാന്‍ സൈനിക വിഭാഗങ്ങളെ...