17
October, 2026

A News 365Times Venture

17
Saturday
October, 2026

A News 365Times Venture

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" – ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

Date:

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

இந்த நூலகம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது தவெக இதற்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்தப் பதிவுகளுக்குப் பதிலளிப்பது போல, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களின் தேவைகளிலிருந்துதான் திட்டங்கள் உருவாகின்றன.

ஒரு திட்டம் என்பதையோ… அதை நிறைவேற்றும் நடவடிக்கையோ ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது.

பெரியார் அறிவுலகம்

மக்கள் நன்மைக்காக…

2016-2021 காலகட்டத்தில் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு – ஏறத்தாழ முடியும் நிலையில் இருந்த பல திட்டங்களை, அதன்பிறகு வந்த தி.மு.க தலைமையிலான அரசின் முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

சில திட்டங்களை அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி அவர்களும் தொடங்கி வைத்தார்.

ஒரு அரசாங்கம் தொடங்கிய வேலைகளைத் தொடர்ந்து செய்து அதைத் திறந்து வைப்பது வழக்கமாக நடைபெற்றதுதான். அது சரியும்கூட. காரணம், திட்டங்களும், அதன் பயன்களும் “மக்கள் நன்மைக்காக…” மட்டுமே.

தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல்…

அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் புதிய நம்பிக்கையாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு முந்தைய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவை என்பனவற்றை அப்படியே தொடர்கிறது.

கோவை மக்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் காலம் கடந்து ‘பெரியார் அறிவுலகம்’ பயன் அளிக்கும்.

அதைக் கோவை மக்கள் உள்பட அனைவரும் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், குறுகிய மனப்பான்மைக்கு இடம்கொடுக்காமல், எந்தவிதத் தம்பட்டமும் அடித்துக்கொள்ளாமல் இன்று ‘பெரியார் அறிவுலகம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காலை, மாலை ஓர் அறிக்கை

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவரைப்போல்,

முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு செயல்படுத்தும் திட்டங்களை, தானே சிந்தித்து… தான் ஒருவரால் வடிவமைத்து,

கட்டமைத்துச் செயல்படுத்தியதைப் போல “காலையில் ஒரு அறிக்கை… மாலையில் ஒரு அறிக்கை” என்று காழ்ப்புணர்வில் வெளியிட்டுத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்; பொறாமையில் துடித்துக்கொண்டிருக்கிறார்.

இத்தனை திட்டங்களை நீங்களே கொண்டுவந்தீர்கள் என்று மக்கள் உணர்ந்திருந்தால் உங்களை மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பார்களே…

தோல்வியடையச் செய்தார்கள்…

பெயரளவுக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றின் உருவாக்கத்தில் நீங்கள் செய்த ஊழல்கள், தேர்தல் நேரத்தில் வெற்று விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட அறிவிப்புகளால் வெறுத்துப் போனதால்தானே, கொளத்தூர் மக்களே உங்களைத் தோல்வியடையச் செய்தார்கள்.

இப்போது பொறாமையால் பொங்கிப் பொருமிக்கொண்டிருக்கும் உங்களை உங்கள் பொறாமையே அழித்துவிடும் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி, மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி, மக்கள் நன்மைக்கான செயல்பாடுகளை முன்னெடுத்துத் தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்; தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து வெற்றி நடைபோடும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നേഹ ബോറ എവിടെ? ദല്‍ഹി പൊലീസ് എങ്ങോട്ട് കൊണ്ടുപോയി എന്ന് വിവരമില്ല

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹിയില്‍ നടന്ന ലെഹ്‌രാ ദോ തിരംഗ മാര്‍ച്ചിനിടെ ദെല്‍ഹി പൊലീസ്...

Instant Noodle: ఇన్‌స్టంట్ నూడుల్స్‌ తినడంలో భారత్‌ రికార్డు..! చైనా, జపాన్, వియత్నాం స్థానాలివే..

Instant Noodle: ఇప్పుడు అంతా ఇన్‌స్టంట్‌ ఫుడ్‌కు అలవాటు పడిపోతున్నారు.. మరీ...

കല്ലേറ് കൊള്ളാന്‍ വിധിക്കപ്പെട്ടതാണ് ആരോഗ്യവകുപ്പ്, താനും പത്ത് വര്‍ഷം കല്ലെറിഞ്ഞതാണ്: തിരിച്ചടി കിട്ടുമ്പോഴാണ് പ്രയാസം അറിയുന്നതെന്ന് കെ.മുരളീധരന്‍

തിരുവനന്തപുരം: കല്ലേറ് കൊള്ളാന്‍ വിധിക്കപ്പെട്ട വകുപ്പാണ് ആരോഗ്യവകുപ്പെന്നും ചുമതല ഏറ്റെടുക്കുമ്പോഴാണ് പ്രയാസം...

“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” – TRB ராஜா

திமுக ஆட்சியில் திட்டம் தொடங்கப்பட்டு, இன்று (அக்டோபர் 16) தவெக ஆட்சியில்...