1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி

Date:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை கடுமையாக சாடியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது நீதிமன்றம். ஆட்சிக்கு வந்தவுடனே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் Party Fund Collect பண்ண தொடங்கிவிட்டது தவெக அரசு என பல புகார்கள் எழுந்தன.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூலித்ததாக த.வெ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசுந்தரி என்பவரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என திமுக துணை அமைப்புச் செயலாளர் ப. தாயகம் கவி அவர்கள் DVAC இல் புகார் அளித்தார். ஆனால் ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் செய்தது என்ன? புகார் அளித்த அந்த வழக்கறிஞரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு வழக்கை மூடி மறைக்க பார்த்தனர்.

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை நன்றாய் வெளுத்துள்ளது.

“லஞ்சம் கொடுத்து வழக்கறிஞர்களாக வர வேண்டுமா?” என்றும் “இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உடனடியாக இப்புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதோடு ’’அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முன்கூட்டியே புகார் அனுப்பப்பட்டும், அவர்கள் ஏன் இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை? புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா? லஞ்சம் தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை?” என்றெல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையின் மந்தமான செயல்பாட்டை நீதிமன்றம் நேரடியாகச் சாடியிருக்கிறது.

ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர்நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது.

இந்த அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் மூலம் பல கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த பல கோடி ரூபாய், தவெக Party Fund க்கு வசூலிக்கபட்டதா? அதுபற்றி விசாரிக்குமா DVAC? இதற்கு பொறுப்பான சட்டத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை செய்யுமா லஞ்ச ஒழிப்பு துறை?

தூயசக்தி என கொடுத்து வந்த Build up-யை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறையை தவெகவின் கிளை அமைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தூய சக்தியின் லட்சணத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இவர்கள் தூய சக்தியல்ல, TVK ஒரு திருட்டு சக்தி என்பது வெளிப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.எஸ் நிர்மல்குமார் தேவையின்றி Take Diversion அரசியல் செய்தது எல்லாம் இந்த மெகா ஊழலை மறைக்கத்தானா? எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவதூறுகளை அள்ளிக்கொட்டி மக்களை மடைமாற்றும் அமைச்சர் நிர்மல் குமாரிடம் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உண்டா? உத்தமர் வேடம் போட்ட விஜய் சார் எங்கே போனார்? ஏன் அவர் அரசு வழக்கறிஞர் நியமன ஊழலை பற்றி புகார் வந்தவுடன் விசாரிக்கவில்லை? திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரை இனியாவது DVAC விசாரிக்குமா? இல்லை அதற்கும் நீதிமன்றம் உத்தரவிடும் வரை காத்திருக்க போகிறீர்களா?

டேபிளில் பைல் உள்ளது என கதை விட்டீர்களே! ஆனால் உண்மையில் நீதிமன்றத்தின் டேபிளில் தான் தவெக வினர் செய்துள்ள ஊழல் பைல்கள் உள்ளன. அதில் ஒன்றை நீதிமன்றம் தற்போது open செய்துள்ளது. விரைவிலே தவெக அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாய் வெளிவரும்.

கள்வன் கையில் வீட்டு சாவியை கொடுத்த கதையாய் தற்போது தமிழ்நாடு தவெக கையில் மாட்டியுள்ளது. விரைவில் இந்த அயோக்கிய கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರಿನಲ್ಲಿ ವಿಶ್ವದ ಮೊದಲ ಸ್ವತಂತ್ರ 8K LED ಡೋಮ್ ಪ್ಲಾನೆಟೇರಿಯಂ – COSMOS

  ಮೈಸೂರು, ಅ.01,2026: ಖಗೋಳ ವಿಜ್ಞಾನ ಮತ್ತು ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಶೋಧನೆಯನ್ನು ಜನಸಾಮಾನ್ಯರು,...

എസ്.ഐ.ആര്‍ ഫോം ഏഴ്: വോട്ടര്‍മാരുടെ പേര് ഒഴിവാക്കിയത് ഗൂഢാലോചന; അന്വേഷണം ആവശ്യപ്പെട്ട് ഡി.കെ. ശിവകുമാര്‍

ബെംഗളൂരു: സംസ്ഥാനത്ത് എസ്.ഐ.ആറിന്റെ ഭാഗമായി ‘ഫോം ഏഴ്’ ഉപയോഗിച്ച് അര്‍ഹരായ വോട്ടര്‍മാരുടെ...

Shubhman Gill: డబుల్ ధమాకా.. వన్డే కెరీర్‌లో రెండో డబుల్ సెంచరీ బాదిన శుభ్‌మన్ గిల్..

గౌహతిలోని బర్సపరా క్రికెట్ స్టేడియంలో వెస్టిండీస్‌తో జరుగుతున్న రెండో వన్డే మ్యాచ్‌లో...

ಫಾರ್ಮ್‌ 7 ದುರ್ಬಳಕೆ: FIR ದಾಖಲಿಸಿ ತನಿಖೆ ನಡೆಸುವವರೆಗೂ ಧರಣಿ ಕೈಬಿಡಲ್ಲ-ಬಿ.ಕೆ ಹರಿಪ್ರಸಾದ್

ಬೆಂಗಳೂರು,ಅಕ್ಟೋಬರ್‌,1,2026 (www.justkannada.in): ಫಾರ್ಮ್‌ ೭ ಮೂಲಕ ಮತದಾರರ ಪಟ್ಟಿಯಿಂದ ಮತದಾರರ...