22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

வீரமணி பாலியல் வழக்கு: "அவரிடம் அதிக நிதி வாங்கியதே…" – நிர்மலின் குற்றச்சாட்டுக்கு RS பாரதி பதில்

Date:

ஜெம் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தீவிரமாகி வருகிறது. தவெக – திமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளர்களாக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் சேர்த்து அறிவித்திருக்கிறார்கள்.

அப்படியென்றால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தங்களை த.வெ.க-வுடன் ஐக்கியமாக்கிவிட்டதா? அப்படியென்றால் கூட்டணிக் கட்சிகளின் பிரசாரத்துக்கு ஆகும் செலவையும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருக்கிறேன்.

நிர்மல் குமார்

த.வெ.க வேட்பாளர்களை தொகுதிக்குள்ளேயே மக்கள் அனுமதிப்பதில்லை. அதனால் காவல்துறை பாதுகாப்புடன் பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு அளித்து வருவதால், திமுகவுக்கு பாதுகாப்பு தேவைப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் வீரமணி தப்பிக்க வைக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டுகிறார். ஆனால், அவரிடம் அதிக நிதி பெற்றவரே நிர்மல்குமார்தான் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் இயல்பாக வந்த தேர்தல் அல்ல. வெற்றி பெற்ற அ.தி.மு.க-வின் இரண்டு எம்.எல்.ஏ.க்களை த.வெ.க ரூ. 35 கோடி கொடுத்து வாங்கியதால் உருவான இடைத்தேர்தல். தி.மு.க தலைவரின் பிரசாரத் திட்டங்கள் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഐ.ഐ.ടി വിദ്യാര്‍ത്ഥിയുടെ മരണത്തില്‍ പ്രതിഷേധം: സൂര്യനാരായണ ദുല്ലയെ ഡീന്‍ സ്ഥാനത്ത് നിന്ന് നീക്കി

മുംബൈ: ഇന്ത്യന്‍ ഇന്‍സ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ടെക്‌നോളജി ബോംബെയിലെ വിദ്യാര്‍ത്ഥിയുടെ മരണത്തെ തുടര്‍ന്ന്...

Pakistan: ఒకవైపు ఇమ్రాన్‌ ఖాన్‌కు వైద్య పరీక్షలు.. మరోవైపు సోదరి అలీమా అరెస్ట్

Pakistan: పాకిస్తాన్‌లో కీలక పరిణామాలు ఎదురవుతున్నాయి. పాకిస్తాన్ మాజీ ప్రధాని, జైలులో...

ಸಮಸ್ಯೆ ಇಟ್ಟುಕೊಂಡು ರಾಜಕಾರಣ ಮಾಡುವ ಉದ್ದೇಶ ನನಗಿಲ್ಲ: ರೈತರು, ಜನರ ರಕ್ಷಣೆಗೆ ಬದ್ಧ-ಸಿಎಂ ಡಿ ಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು, ಸೆಪ್ಟಂಬರ್‌,21,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದ ರೈತರು, ಜನರ ರಕ್ಷಣೆ ನನಗೆ...

അയോധ്യ രാമക്ഷേത്രക്കൊള്ള: സി.സി.ടി.വിയില്‍ 105 തവണ മോഷണം പതിഞ്ഞു; സുപ്രീം കോടതിയെ അറിയിച്ച് യു.പി സര്‍ക്കാര്‍

ലഖ്‌നൗ: അയോധ്യ രാമക്ഷേത്രത്തിലെ സംഭാവന മോഷണവുമായി ബന്ധപ്പെട്ട് സി.സി.ടി.വിയില്‍ 105 തവണ...