18
September, 2026

A News 365Times Venture

18
Friday
September, 2026

A News 365Times Venture

'அடக்கி வாசிங்க; திமுகவின் ஆதரவால்தான் காங், விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது' – அன்புமணி

Date:

பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

கூட்டணியில் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுவது ஒரு குழப்பமான நிலைப்பாடு, ஆனால், இதில் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. விஜய்க்கு தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தவெகவினர் மட்டும்தான் சொல்லலாம், சொல்ல முடியும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் எல்லாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுகவின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது தவெக பக்கம் வந்துவிட்டார்கள். அதன்பிறகு வீரவசனம் பேசுவது எல்லாம் அர்த்தமில்லை. அடக்கி வாசியுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“மூளை திசு ஆய்வு படிப்பை இவர் மட்டுமே படிக்கிறார்; அரசு உறுதுணையாக இருக்கும்" – அமைச்சர் வன்னி அரசு

அயலக மாணவர் பாரதிதாசனுக்குத் தேவையான அனைத்து கல்வி உதவித்தொகைகளும் தமிழ்நாடு அரசால்...

Marital Rape: వైవాహిక అత్యాచారంపై సుప్రీంకోర్టు కీలక విచారణ.. తెగే పంచాయితీనేనా?

భారత్‌లో వైవాహిక అత్యాచారం (Marital Rape) అంశంపై దాదాపు దశాబ్దంగా కొనసాగుతున్న...

ನಮಗೆ ರಾಜಕೀಯಕ್ಕಿಂತ ಜನರ ಬದುಕು ಮುಖ್ಯ: ಸಿಎಂ ಡಿ.ಕೆ ಶಿವಕುಮಾರ್

ಮಂಗಳೂರು, ಸೆಪ್ಟಂಬರ್, 18,2026 (www.justkannada.in): ನಮಗೆ ರಾಜಕೀಯಕ್ಕಿಂತ ಜನರ ಬದುಕು...

എല്‍.ജി.ബി.ടി.ക്യു.ഐ+ വ്യക്തികളെ കണ്‍വെര്‍ഷന്‍ തെറാപ്പിക്ക് വിധേയമാക്കരുത്; അത് അശാസ്ത്രീയവും അധാര്‍മികവുമാണ്: ഐ.എം.എ

കൊച്ചി: എല്‍.ജി.ബി.ടി.ക്യു.ഐ പ്ലസ് വ്യക്തികളുടെ ലൈംഗിക ആഭിമുഖ്യവും ലിംഗ സ്വതവും അടിച്ചമര്‍ത്താന്‍...