11
September, 2026

A News 365Times Venture

11
Friday
September, 2026

A News 365Times Venture

NIA: `டெல்லி செங்கோட்டை டார்கெட் இல்ல…' – கார் குண்டுவெடிப்பு குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Date:

கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 11 பேர் பலியான நிலையில், 29 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், NIA தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையில், “கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஹூண்டாய் i20 காரில் உமர் என்பவர் சென்றிருக்கிறார். மாலை 6.37 மணியளவில் அவர் லால் மந்திர் அருகே காரை நிறுத்த முயன்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்திருக்கிறது.

என்.ஐ.ஏ – NIA

இது பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்தது. மேலும், அங்கு காவல்துறைப் பாதுகாப்பும் அதிகமாக இருந்ததால், காரைத் திட்டமிட்டபடி அங்கு நிறுத்த முடியாமல் திரும்பியவர், பின்னர் காரை செங்கோட்டை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, செங்கோட்டையின் 4-வது நுழைவுவாயில் அருகே காரை நிறுத்தியிருக்கிறார். மாலை 6.50 மணியளவில் குண்டு வெடித்தது. கார் குண்டுவெடிப்பை நடத்துவதற்காக சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், உமருடன் தொடர்புடையவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் இதர பொருட்களிலும் ஒரே வகையான ரசாயனங்கள் இருப்பது தடயவியல் பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இதன்மூலம் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட குழு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സത്യ നികേതന്‍ ഹോസ്റ്റല്‍ അപകടം; നടത്തിപ്പുകാര്‍ക്ക് അപകട മുന്നറിയിപ്പ് നല്‍കിയിരുന്നതായി തൊഴിലാളി

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹി സത്യ നികേതനില്‍ ഹോസ്റ്റല്‍ കെട്ടിടം തകരുന്നതിന് മണിക്കൂറുകള്‍ക്ക് മുമ്പ്...

பாளையங்கோட்டை: குப்பைக் கிடங்காக மாறி வரும் பிரதான சாலை… அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில், சுமார் 2 கி.மீ பரப்பளவிற்குள்...

BRICS Summit 2026: పుతిన్-మోడీ-జిన్‌పింగ్.. ప్రపంచం చూపంతా ఢిల్లీ వైపే!

BRICS Summit 2026: భారత్ మరోసారి అంతర్జాతీయ కార్యక్రమానికి వేదికగా మారుతోంది....

ಕೈ’ ನಾಯಕ ರಾಹುಲ್ ಗಾಂಧಿ ಭೇಟಿಯಾದ ಮಾಜಿ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ನವದೆಹಲಿ,ಸೆಪ್ಟಂಬರ್,11,2026 (www.jstkannada.in); ದೆಹಲಿ ಪ್ರವಾಸದಲ್ಲಿರುವ ಮಾಜಿ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರು...