21
August, 2026

A News 365Times Venture

21
Friday
August, 2026

A News 365Times Venture

'227 எம்.எல்.ஏக்கள்; 396 கார்கள்; ரூ.89 கோடி; யாரிடமெல்லாம் கார் இல்லை? – MLA's Cars Detailed Report

Date:

சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் கார் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். ‘கோடிக்கணக்கான சொத்துகளை வைத்துக் கொண்டு ஏற்கனவே பல கார்களை வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் எதற்கு கார் கொடுக்க வேண்டும்?’ என இந்த அறிவிப்பு கடுமையாக விமர்சிக்கவும்படுகிறது.

CM Vijay

திமுக உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசியிருக்கிறார். ‘கார் விவகாரம்’ புகை கிளப்பியிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ‘கார் டேட்டா’ இங்கே.

கார் இல்லாத எம்.எல்.ஏ-க்கள்!

தற்போது தமிழக சட்டமன்றத்தின் மொத்த பலம் 227 (6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டனர்; இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார்).

இந்த 227 பேரில், 54 எம்.எல்.ஏ-க்களிடம் ஒரே ஒரு கார் கூட இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார் இல்லாத உறுப்பினர்கள்
கார் இல்லாத உறுப்பினர்கள்

கட்சிவாரியாக கார் இல்லாத எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை:

* தவெக: 107 எம்.எல்.ஏ-க்களில் 32 பேரிடம் கார் இல்லை.

* திமுக: 59 எம்.எல்.ஏ-க்களில் 9 பேரிடம் கார் இல்லை.

* அதிமுக: 41 எம்.எல்.ஏ-க்களில் 8 பேரிடம் கார் இல்லை.

கார் இல்லாத விஐபிக்கள்
கார் இல்லாத விஐபிக்கள்

வேட்புமனுத் தாக்கல் தரவுகளின்படி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் வரை பலரிடம் சொந்தமாகக் கார் இல்லை என்றே கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

கட்சி வாரியாக கார்களின் விவரம்:

சட்டமன்றத்தில் உள்ள 227 எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து வைத்திருக்கும் மொத்த கார்களின் எண்ணிக்கை 396. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ₹89 கோடி!

மொத்த கார்களின் எண்ணிக்கை
மொத்த கார்களின் எண்ணிக்கை

தவெக (107 எம்.எல்.ஏ-க்கள்):

* கார்களின் எண்ணிக்கை: 177 கார்கள் (மொத்தக் கார்களில் 44.7%)

* மொத்த மதிப்பு: ₹41 கோடி

* சராசரி: ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 1.65 கார்கள்

* திமுக (59 எம்.எல்.ஏ-க்கள்):

* கார்களின் எண்ணிக்கை: 94 கார்கள் (மொத்தக் கார்களில் 23.7%)

* மொத்த மதிப்பு: ₹18 கோடி

* சராசரி: ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 1.59 கார்கள்

* அதிமுக (41 எம்.எல்.ஏ-க்கள்):

* கார்களின் எண்ணிக்கை: 89 கார்கள் (மொத்தக் கார்களில் 22.5%)

* மொத்த மதிப்பு: ₹19 கோடி

* சராசரி: ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 2.17 கார்கள்

இந்த மூன்று கட்சிகள் மட்டுமே சட்டமன்றத்தின் மொத்த கார்களில் 90.9% பங்கைக் கொண்டுள்ளன. சராசரி அடிப்படையில் பார்த்தால், அதிமுக எம்.எல்.ஏ ஒருவரிடம் சராசரியாக 2 கார்கள் வரை இருக்கின்றன.

சராசரி எண்ணிக்கை
சராசரி எண்ணிக்கை

அதிக எண்ணிக்கையில் கார்கள் வைத்திருப்பவர்கள்:

* 1 கார் வைத்திருப்பவர்கள்: 70 எம்.எல்.ஏ-க்கள்.

* 2 முதல் 4 கார்கள் வைத்திருப்பவர்கள்: 89 எம்.எல்.ஏ-க்கள்.

* 5 அல்லது அதற்கு மேல் கார்கள் வைத்திருப்பவர்கள்: 14 எம்.எல்.ஏ-க்கள்.

அதிக கார்கள் வைத்திருப்போர்
அதிக கார்கள் வைத்திருப்போர்

அதிகக் கார்கள் வைத்திருக்கும் டாப் 5 எம்.எல்.ஏ-க்கள்:

* கவுண்டம்பாளையம் கனிமொழி (தவெக): இவர் கணக்கில் மொத்தம் 26 கார்கள் உள்ளன (12 தனிப்பட்ட பயன்பாடு – மதிப்பு ₹2.7 கோடி; 14 வணிகப் பயன்பாடு).

* ரவி மனோகரன் (பழனி – அதிமுக): 10 கார்கள் (மதிப்பு ₹3.4 கோடி).

* பிரவீன் (விளவங்கோடு – காங்கிரஸ்): 9 கார்கள் (மதிப்பு ₹2.7 கோடி).

அதிக கார்கள் வைத்திருப்போர்
அதிக கார்கள் வைத்திருப்போர்

* லீமா ரோஸ் (லால்குடி): 9 கார்கள் (மதிப்பு ₹2.1 கோடி).

* டி.கே.பிரபு (காரைக்குடி): 8 கார்கள் (மதிப்பு ₹2.1 கோடி).

சட்டமன்ற உறுப்பினர்களிடம் உள்ள கார்களில் அதிக மதிப்புடைய வாகனங்களை வைத்திருப்பவர்கள்:

* 1-ம் இடம்: சி.எம் விஜய் – டொயோட்டா லெக்சஸ் (மதிப்பு ₹3 கோடி).

* 2-ம் இடம்: பிரேமலதா விஜயகாந்த் – லேண்ட் க்ரூஸர் (மதிப்பு ₹2.1 கோடி).

* 3 & 4-ம் இடங்கள்: சி.எம் விஜய் – பி.எம்.டபிள்யூ (₹2 கோடி) & வெல்ஃபையர் (₹1.6 கோடி).

* 5-ம் இடம்: லீமா ரோஸ் – லெக்சஸ் (₹1.5 கோடி).

Top 5 Expensive Cars
Top 5 Expensive Cars

சமூக-பொருளாதாரக் கோணம்

இந்தத் தரவுகளை ஆராயும்போது ஒரு முக்கியமான சமூக-பொருளாதார வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது:

* பொதுத் தொகுதிகள் (183 எம்.எல்.ஏ-க்கள்): 351 கார்கள் வைத்துள்ளனர் (சராசரியாக ஒருவருக்கு 2 கார்கள்).

* தனித் தொகுதிகள் (44 எம்.எல்.ஏ-க்கள்): மொத்தமே 45 கார்கள்தான் வைத்துள்ளனர். இதில் 14 பேரிடம் காரே இல்லை.

பொது தொகுதி - தனித்தொகுதி டேட்டா
பொது தொகுதி – தனித்தொகுதி டேட்டா

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய, மக்கள் பணியாற்ற வாகன வசதி தேவைப்படும் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் வழங்குமென முடிவெடுத்திருந்தால் கூட இந்த அறிவிப்பின் மீது பெரிய விமர்சனம் எழுந்திருக்காது.

ஆனால், ஏற்கனவே பல கார்களை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கும் சேர்த்து அரசுச் செலவில் புதிய காரும், மாதம் ₹75,000 பராமரிப்புப் படியும் வழங்குவதுதான் இங்கே பிரச்னை ஆகிறது.

மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் பேசுகையில், ‘என்னிடம் நான்கைந்து கார்கள் இருந்தாலும் முதல்வர் விஜய் கொடுக்கும் காரையே பயன்படுத்துவேன்’ என்றார். ஆனால், எத்தனை நாளைக்கு அந்த காரை பயன்படுத்துவார். அரசியல்வாதிகள் காரை ஒரு சமூக அந்தஸ்தாக கௌரவமாக பார்க்கின்றனர்.

CM Vijay
CM Vijay

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது வேட்புமனுவில் தனக்கு காரே இல்லை எனக் கூறியிருந்தார். காரே இல்லாத ஸ்டாலின் அரசு கொடுத்த இன்னோவா காரில் பயணிக்கவில்லை. சொகுசான டிபண்டர் காரில்தான் பயணித்தார். இப்போதைய முதல்வர் விஜய் பதவியேற்க வந்த போது மட்டுமே அரசு காரில் வந்தார். இப்போது பி.எம்.டபிள்யூ, லெக்சஸ், வெல்பயர் என தினசரி ஒரு சொகுசு காரில் வருகிறார்.

அமைச்சர்கள் ஆதவ், மரிய வில்சன் போன்றோரும் அரசு கார்களில் பயணிப்பதில்லை. தங்களின் கார்களில்தான் பயணிக்கிறார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே அரசு காரை பயன்படுத்துவதில்லையெனில், எம்.எல்.ஏக்கள் மட்டும் அரசு காரை பயன்படுத்துவார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

பத்தோடு பதினொன்றாக அவர்களுக்கு கூடுதலாக ஒரு கார். எம்.எல்.ஏ வீட்டின் வேலையாட்கள் காய்கறி வாங்க அரசு கொடுக்கப்போகும் காரை பயன்படுத்துவார்கள். இருக்கிற நிதி நெருக்கடியில் அதற்கு மாதம் 75000 ரூபாய் படி கொடுக்க வேண்டுமா?

மக்களின் எண்ணப்படி ‘எல்லாருக்கும் கார்’ என்பதை ரத்து செய்து தேவைக்கேற்ப தகுதிக்கேற்ப எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.!

(டேட்டா & டிசைனிங் – ம.காசி விஸ்வநாதன்)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಂಡ್ಯ ಕೃಷಿ ವಿವಿಯ ಕೃಷಿ ವಿಜ್ಞಾನ ಕೇಂದ್ರದ ಸಹಾಯಕ ಹುದ್ದೆಗೆ ತೃತೀಯ ಲಿಂಗಿ ಆಯ್ಕೆ

ಮಂಡ್ಯ,ಆಗಸ್ಟ್, 21,2026 (www.justkannada.in): ತೃತೀಯ ಲಿಂಗಿ ಮೈನಾ ಹೆಚ್. ಅವರು...

ഓപ്പറേഷന്‍ തൂഫാന്‍: അറസ്റ്റില്‍ എറണാകുളം മുന്നില്‍; കേസുകളില്‍ കോഴിക്കോട് ഒന്നാമത്

  തിരുവനന്തപുരം: സംസ്ഥാനത്ത് ലഹരിക്കെതിരായ ശക്തമായ നടപടികളുമായി മുന്നേറുന്ന ഓപ്പറേഷന്‍ തൂഫാന്റെ...

Vizag Job Fraud: విశాఖలో కిలాడీ లేడీ.. నిరుద్యోగులకు కుచ్చుటోపీ!

యూరప్ దేశాల్లో ఉద్యోగాల పేరుతో నిరుద్యోగుల నుంచి భారీగా వసూలు చేసి.....

ಬಿ.ನಾಗೇಂದ್ರ ರಾಜೀನಾಮೆಗೆ ಆಗ್ರಹ:  ಕಪ್ಪು ಟೀ ಶರ್ಟ್ ಧರಿಸಿ BJP-JDS ಶಾಸಕರ ಪ್ರತಿಭಟನೆ

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,21,2026 (www.justkannada.in): ಸಚಿವ ಬಿ.ನಾಗೇಂದ್ರ ರಾಜೀನಾಮೆಗೆ ಆಗ್ರಹಿಸಿ ಬಿಜೆಪಿ-ಜೆಡಿಎಸ್ ಶಾಸಕರು...