6
October, 2026

A News 365Times Venture

6
Tuesday
October, 2026

A News 365Times Venture

சொத்து வரி மறு மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தம் – சென்னை மாநகராட்சி முடிவு!

Date:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான சொத்து உரிமையாளர்களுக்கு அண்மையில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி தொடர்பான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, ஏற்கெனவே செலுத்தி வந்த சொத்து வரியைவிட அதிகமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, மாநகராட்சி தரப்பில் ஆரம்பத்தில் சொத்து வரி பொதுவாக உயர்த்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. சொத்து வாங்கும்போது அல்லது பதிவு செய்யும்போது இருந்த நிலம் மற்றும் கட்டடத்தின் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு வரி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் கட்டடத்தின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ப வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி

இந்நிலையில், மறுமதிப்பீட்டு நடவடிக்கை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து, சொத்து வரி மறு மதிப்பீட்டை தற்காலிகமாக நிறுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Special Train: శ్రీశైలం, తిరుమల భక్తులతో సోమనాథ్‌కు ప్రత్యేక రైలు.. పూర్తి వివరాలు ఇవే

ఆంధ్రప్రదేశ్ లోని విజయవాడ నుంచి గుజరాత్‌లోని సోమనాథ్ క్షేత్రానికి ‘సోమనాథ్ స్వాభిమాన్...

ಧರ್ಮ ಮತ್ತು ಜಾತಿ ಈ ದೇಶದ ದುರಂತ: ಕಫೀಲ್ ಖಾನ್

  Bangalore, oct.05,2026: ಧರ್ಮ ಮತ್ತು ಜಾತಿ ಈ ದೇಶವನ್ನು ನುಂಗಿಹಾಕುತ್ತಿದೆ...

ഗ്യാനേഷിനെതിരായ സമരം: എ.സി.പിക്കെതിരെ ലൈംഗികാതിക്രമ പരാതി; പരാതിക്കാരിക്കെതിരെ എഫ്.ഐ.ആറിടാന്‍ പൊലീസ്

ന്യൂദല്‍ഹി: ജന്തര്‍ മന്തറില്‍ പ്രതിഷേധം റിപ്പോര്‍ട്ട് ചെയ്യുന്നതിനിടെ ദല്‍ഹി പൊലീസ് എ.സി.പി...

'குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!' -எக்மோரில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை...