12
August, 2026

A News 365Times Venture

12
Wednesday
August, 2026

A News 365Times Venture

'பிகில், கோட் பட தயாரிப்பாளருக்கு புதிய அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' – விவரம் என்ன?

Date:

முதல்வர் விஜய்யை வைத்து பிகில், கோட் போன்ற படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி, அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அர்ச்சனா கல்பாத்தி – விஜய்

ஆண்டுக்கு 10 லட்ச ரூபாயுக்கும் மேல் வருவாய் உள்ள கோயில்களுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களை அழைத்து அறங்காவலரை நியமிக்க 7 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை நியமித்திருக்கிறது. அந்த 7 பேரில் அர்ச்சனா கல்பாத்தியும் ஒருவர்.

அவருக்கு இந்த குழுவின் உறுப்பினர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமத்தை சேர்ந்தவர். முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது 2019 இல் பிகில் படத்தையும் 2024 இல் கோட் என்கிற படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விஜய்யின் படங்களை தயாரித்திருப்பதாலும், முதல்வருக்கு ‘மிக நெருங்கிய’ வட்டத்தை சேர்ந்த சிலரின் சிபாரிசாலும் அர்ச்சனாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கோட்டையில் கிசுகிசுக்கின்றனர்.

அர்ச்சனா கல்பாத்தி

ஏற்கெனவே ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு டெல்லி பிரதிநிதி பதவியும், ஆன்லைன் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குருவுக்கு தகவல் சரிபார்ப்புக் குழுவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.എസും ഇറാനും കരാറിനോട് അടുത്തെന്ന് പാകിസ്ഥാന്‍; ഇറാന്‍ നഷ്ടപരിഹാരം നല്‍കണമെന്ന് ട്രംപ്

ടെഹ്‌റാന്‍: യു.എസ്-ഇറാന്‍ യുദ്ധവുമായി ബന്ധപ്പെട്ട് ഇരു പക്ഷവും എന്തെങ്കിലും കരാറില്‍ ഉടന്‍...

`தமிழ்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், ஜன கண மன என மொத்தம் 12 நிமிடங்கள் நிற்கணுமா?' – சசி தரூர் கேள்வி

கடந்த ஜூலை 29-ம் தேதி மாநிலங்களவையிலும், ஜூலை 30-ம் தேதி மக்களவையிலும்...

RK Roja: మంత్రి లోకేష్‌పై రోజా సంచలన ఆరోపణలు..

RK Roja: మంత్రి నారా లోకేష్‌పై వైఎస్‌ఆర్‌ కాంగ్రెస్‌ పార్టీ సీనియర్‌...

ಆರೋಗ್ಯ ಇಲಾಖೆಯಲ್ಲಿ 7,000 ಹುದ್ದೆಗಳ ನೇಮಕಾತಿಗೆ ಸಿಎಂ ಅಸ್ತು : ಸಚಿವ ಯು.ಟಿ. ಖಾದರ್

  ಮೈಸೂರು, ಆ.೧೧,೨೦೨೬ : ರಾಜ್ಯದ ಆರೋಗ್ಯ ಇಲಾಖೆಯಲ್ಲಿ ಖಾಲಿ ಇರುವ...