28
September, 2026

A News 365Times Venture

28
Monday
September, 2026

A News 365Times Venture

"எங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்னை இருக்கிறது" – எஸ்.பி. வேலுமணி ஓபன் டாக்

Date:

கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் செ.ம. வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி.‌வேலுமணி, “செ.ம.வேலுச்சாமி அண்ணன் தனக்கு பொறுப்பு வழங்கியது பற்றி வருத்தப்பட வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை தலைமைக்கும் எங்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. இது ஆரோக்கியமான பிரச்னை.

எஸ்.பி. வேலுமணி

முதன் முதலில் பிரச்னை எங்கு வருகிறது என்றால், தி.மு.க-வுடன் அ.தி.மு.க செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும் போதுதான், பிரச்னை வருகிறது. எங்களை த.வெ.க-விக்கு ஆதரவு ஓட்டு போட்ட துரோகி என்று கூறுகிறார்கள்.

தி.மு.க எதிர்ப்பு என்ற வகையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போட்டோம். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், தி.மு.க-வுடன் செல்லலாம் என்று கூறியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

பொதுக்குழு கூட்ட வேண்டும். கமிட்டி போட வேண்டும். மீண்டும் பழைய பதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தான் நாங்கள் வைத்து வருகிறோம். நாங்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிவிட்டோம்.

அடுத்த தலைமுறை வரவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் சுயநலமாகச் செயல்படுகிறார்கள். மனசாட்சி இல்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ವಿಶ್ವ ಪ್ರವಾಸೋದ್ಯಮ ದಿನ: ಅವತಿ ಬೆಟ್ಟಕ್ಕೆ ಚಾರಣ, ಸ್ವಚ್ಚತಾ ಕಾರ್ಯ ಅಭಿಯಾನ

ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ, ಸೆಪ್ಟಂಬರ್,28,2026 (www.justkannada.in): ವಿಶ್ವ ಪ್ರವಾಸೋದ್ಯಮ ದಿನದ ಅಂಗವಾಗಿ...

നിര്‍ഭയ കേസിന്റെ ആവര്‍ത്തനം; ദല്‍ഹിയിലെ പീഡനക്കേസുകളില്‍ സ്വമേധയാ കേസ് എടുത്ത് സുപ്രീം കോടതി

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹി എന്‍.സി.ആര്‍ മേഖലയില്‍ തുടര്‍ച്ചയായി റിപ്പോര്‍ട്ട് ചെയ്യുന്ന ലൈംഗികാതിക്രമ കേസുകളില്‍...

ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ் , சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' – டி.ஆர் பாலு புகார்

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது...

Ind Vs WI: కోహ్లీ, గిల్ మానియా.. 295 రన్స్ ఉఫ్.. భారత్ ఘన విజయం..

తిరువనంతపురంలోని గ్రీన్‌ఫీల్డ్ ఇంటర్నేషనల్ స్టేడియం వేదికగా వెస్టిండీస్‌తో జరిగిన తొలి వన్డేలో...