1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

இடைத்தேர்தல்: `முன்னிலையில் பிரசாந்த் கிஷோர்' – கவனம் ஈர்க்கும் பீகார்!

Date:

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு அறிவித்தபடி ஜூலை மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025

குறிப்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அபிஷேக் குமார் சின்ஹா என்பவர் போட்டியிட இருந்த நிலையில் அவர் குடும்ப காரணங்களை தெரிவித்து வாபஸ் பெற்றார். அவருக்கு மாற்றாக நீரஜ் குமார் சின்ஹா என்பவரை பா.ஜ.க களம் இறக்கியது.

பாங்கிபூர், பீகார்

பாங்கிபூர் பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது. இங்கிருந்து போட்டியிட்ட எந்தவொரு பா.ஜ.க வேட்பாளரும் இதுவரை தோல்வியடைந்ததில்லை. அதே நேரம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் தேர்தல் கள வருகையும் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் 34.30 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான 41.45 சதவீத வாக்குகளை விட ஏழு சதவீதத்திற்கும் குறைவாகும்.

பாங்கிபூர் இடைத்தேர்தல் முடிவுகளின் ஆரம்பக்கட்ட நிலவரப்படி, பா.ஜ.க-வின் நீரஜ் குமார் சின்ஹாவை விட ‘ஜன் சுராஜ்’ கட்சி வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் 862 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

அரசியல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கிஷோர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 2,225 வாக்குகளைப் பெற்றார். சின்ஹா ​​1,363 வாக்குகளையும், ஆர்ஜேடி கட்சியின் ரேகா குப்தா 505 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மொத்தம் 31 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் கிஷோர், பாஜகவிடமிருந்து இத்தொகுதியைக் கைப்பற்றுவாரா என்றக் கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസിന്റെ മരവിപ്പിച്ച നാല് അക്കൗണ്ടുകള്‍ പ്രവര്‍ത്തിപ്പിക്കാന്‍ അനുമതി നിഷേധിച്ച് സുപ്രീം കോടതി

  ന്യൂദല്‍ഹി: ഭൂമി വിതരണ അന്വേഷണവുമായി ബന്ധപ്പെട്ട് മരവിപ്പിച്ച അക്കൗണ്ടുകള്‍ പ്രവര്‍ത്തിപ്പിക്കാന്‍...

புதுச்சேரி: அமைச்சருக்கு கொலை மிரட்டல்! – தவெக ஆதரவு எம்எல்ஏ மீது 7 பிரிவுகளில் வழக்கு; முழு பின்னணி

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் `லிஃப்ட்' தருவதாகக் கூறி பெண் ஒருவர் பாலியல்...

Flydubai: మహిళలతో కరచాలనానికి కో-పైలట్ ఎందుకు నిరాకరించాడు? కారణమిదేనా?

దుబాయ్ నుంచి టెల్ అవీవ్ వెళ్తున్న ఫ్లైదుబాయ్ విమానానికి ఘోర ప్రమాదం...

ಡಿಸ್ಟ್ರಿಕ್ ಜಡ್ಜ್‌ ಕಾರಿಗೆ ಆಟೋ ಡಿಕ್ಕಿ: ಓರ್ವ ಸಾವು, ಇಬ್ಬರಿಗೆ ಗಾಯ

ಮಂಗಳೂರು,ಅಕ್ಟೋಬರ್‌,1,2026 (www.justkannada.in): ದಕ್ಷಿಣ ಕನ್ನಡ ಜಿಲ್ಲಾ 1ನೇ ಹೆಚ್ಚುವರಿ ಜಿಲ್ಲಾ...