1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

"காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட, திமுக சொல்வதை தான் டி.கே.சிவக்குமார் கேட்பார்" – நிர்மல் குமார்

Date:

காவிரி விவகாரம் மீண்டும் தமிழ்நாடு, கர்நாடகா இடையே பிரச்னையாக முற்றி வருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மீண்டும் முயற்சிகளைச் செய்து வருகிறது கர்நாடகா அரசு. இதற்கு தமிழ்நாடு கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இது சம்பந்தமாக பேச நாளை (ஆகஸ்ட் 3) கர்நாடகா செல்வதாக இருந்தது. விஜய்யை கர்நாடகாவிற்கு அழைத்திருக்கிறேன் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேறு கூறியிருந்தார்.

காவிரி ஆறு

ஆனால், நேற்று முன்தினம் (ஜூலை 31), இப்போதைக்கு விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கூறிவிட்டார் டி.கே.சிவக்குமார்.

விஜய் கர்நாடகா செல்ல திட்டமிட்டிருந்ததற்கு திமுக, அதிமுக தொடங்கி விவசாய சங்கங்கள் வரை அனைத்து தரப்பும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தன.

நிர்மல் குமார் பேட்டி

இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “நேற்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் “தமிழக முதல்வர் தனிமைப்பட்டு நிற்கிறார்” என்று ஒரு வார்த்தையைச் சேர்த்து இருக்கிறார்.

பல வாரங்களாகப் பல தரப்பினர் சொன்னது என்னவென்றால், கர்நாடகாவில் இருக்கும் டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் திமுக குடும்பத்திற்கும் இடையே கட்சியைத் தாண்டி பல நல்ல உறவுகள் இருக்கிறது.

பல வருடங்களாகவே இவர்களுக்குள் நல்ல பிணைப்பு உள்ளது. அதனால் திமுகவினர் என்ன சொல்வார்களோ அதைத்தான் கர்நாடகாவிலும் செய்வார்கள். டி.கே. சிவகுமார் அனைத்தையும் விட திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல வழிகளில் விரும்பினார்.

டி.கே.சிவக்குமார் - ஸ்டாலின்
டி.கே.சிவக்குமார் – ஸ்டாலின்

காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதை விட டி.கே. சிவகுமார், திமுக குடும்பம் மற்றும் ஸ்டாலின் அவர்கள் சொல்வதைத்தான் அதிகமாகக் கேட்பார் என்று பல தரப்பினரும் சொல்லி வந்தார்கள்.

அதேபோல்தான் கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்கின்றன. ஏனெனில், அவர் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத்தான் திமுக சொல்கிறது. திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார்.

“தமிழக முதல்வர் தனிமைப்பட்டு நிற்கிறார்” என்ற வார்த்தை, எந்த வகையிலும் தமிழக மக்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் தெரிவித்தது போல இருக்கிறது.

நேற்று காலை முதல்வர் பல தரப்பு ஆலோசனைகளை முடித்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார். மதியமே நம்முடைய வழக்கறிஞர் உமாபதி அவர்களும் இதுகுறித்துப் பேசி, அனைத்து ஆலோசனைகளும் முடிந்து வழக்கு பதிவு செய்யும் திட்டத்தைச் சொன்னார்.

அந்த நடைமுறை போய்க்கொண்டிருக்கும்போதே, திமுக அவசரமாக மாலை 5 மணிக்கு மேல் தனியாக வழக்கை பதிவு செய்கிறது. இந்த மாதிரி ஒரே மாநிலத்தில் பல மனுக்களைத் தாக்கல் செய்தால் எவ்வளவு குழப்பம் ஏற்படும்?

அது எந்த அளவுக்கு அந்த மாநிலத்திற்கான உரிமைகளைப் பின்னோக்கித் தள்ளும்? கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் என்ன செய்தார்கள்? திமுக தரப்பில் ஏதேனும் ஒரு மனுவையாவது தாக்கல் செய்திருக்கிறார்களா?”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರಿನಲ್ಲಿ ವಿಶ್ವದ ಮೊದಲ ಸ್ವತಂತ್ರ 8K LED ಡೋಮ್ ಪ್ಲಾನೆಟೇರಿಯಂ – COSMOS

  ಮೈಸೂರು, ಅ.01,2026: ಖಗೋಳ ವಿಜ್ಞಾನ ಮತ್ತು ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಶೋಧನೆಯನ್ನು ಜನಸಾಮಾನ್ಯರು,...

എസ്.ഐ.ആര്‍ ഫോം ഏഴ്: വോട്ടര്‍മാരുടെ പേര് ഒഴിവാക്കിയത് ഗൂഢാലോചന; അന്വേഷണം ആവശ്യപ്പെട്ട് ഡി.കെ. ശിവകുമാര്‍

ബെംഗളൂരു: സംസ്ഥാനത്ത് എസ്.ഐ.ആറിന്റെ ഭാഗമായി ‘ഫോം ഏഴ്’ ഉപയോഗിച്ച് അര്‍ഹരായ വോട്ടര്‍മാരുടെ...

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை...

Shubhman Gill: డబుల్ ధమాకా.. వన్డే కెరీర్‌లో రెండో డబుల్ సెంచరీ బాదిన శుభ్‌మన్ గిల్..

గౌహతిలోని బర్సపరా క్రికెట్ స్టేడియంలో వెస్టిండీస్‌తో జరుగుతున్న రెండో వన్డే మ్యాచ్‌లో...