10
October, 2026

A News 365Times Venture

10
Saturday
October, 2026

A News 365Times Venture

`முதல்வர் விஜய் இங்கு வரவிருக்கிறார்; இரு மாநில நலன்களையும் கருத்தில் கொண்டு..!' – டி.கே.சிவக்குமார்

Date:

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரம், இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாகியிருக்கிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடகா அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதிலும், விவசாயிகளின் கோரிக்கையும் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையில், காவிரி நீர் வரத்தின்றி டெல்டா விவசாயிகள் கடும் சோகத்தில் இருக்கின்றனர். அதே நேரம், தற்போது இருக்கும் தவெக அரசு சரியாகச் செயல்படாததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், முதல்வர் கர்நாடகா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், விவசாயச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டுடனான காவிரி நதிநீர் பகிர்வு குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக அனைவரும் மிகவும் மும்முரமாக இருந்ததால், இன்று மாலை 5 மணிக்கு நாங்கள் கூடிப் பேசவுள்ளோம். நாங்கள் ஏற்கெனவே அனைத்தையும் விவாதித்து இறுதி செய்துவிட்டோம். இனி நடைமுறை சார்ந்த சில விஷயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அவற்றையும் நாங்கள் விவாதிப்போம். காவிரி விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் வரவிருக்கிறார். காவிரி நீர் விவகாரம் குறித்து விவாதித்து, இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒரு தீர்வை எட்ட நாங்கள் விரும்புகிறோம். அவரது கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டதுடன், நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளேன்” என்றார்.

இந்த நிலையில், காவிரியில் 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Amazon Festival Sale: ఈ కంపెనీ ల్యాప్‌టాప్‌లపై భారీ ఆఫర్లు.. ఓ లుక్కేయండి..

అమెజాన్ గ్రేట్ ఇండియన్ ఫెస్టివల్ 2026 సేల్‌లో హెచ్‌పి, డెల్, ఆసుస్,...

ജനാധിപത്യ നിഷേധത്തിനെതിരായ സമരത്തില്‍ പങ്കെടുക്കാനായതില്‍ സന്തോഷം; ഇതുകൊണ്ടൊന്നും പ്രക്ഷോഭം തളരില്ല: പൊലീസ് വിട്ടയച്ചതിന് പിന്നാലെ പിണറായി വിജയന്‍

  ന്യൂദല്‍ഹി: മുഖ്യതെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി ആവശ്യപ്പെട്ടുകൊണ്ട് നടത്തിയ...

இடைத்தேர்தல்: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி… எஸ்.பி.வேலுமணி அணியின் மெகா திட்டம்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு கலகத்தை உண்டாக்கியிருக்கிறது....

Netanyahu: ఆమె యూదు వ్యతిరేకి.. నవీ పిళ్లైకు నోబెల్ బహుమతి ఇవ్వడంపై నెతన్యాహు తీవ్ర వ్యాఖ్యలు

నోబెల్ శాంతి బహుమతి విజేత నవీ పిళ్లైపై ఇజ్రాయెల్ ప్రధానమంత్రి బెంజమిన్...