28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

"அடிச்சு விளையாடுவோம்; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே அடுத்த லட்சியம்" – மாணிக்கம் தாகூர் உறுதி

Date:

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாளை அவர் புதிய தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பலமான இயக்கமாக மாற்றுவதே தனது இலட்சியம் என மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

மாணிக்கம் தாகூர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான தருணம். இந்தப் பொறுப்பு சிரமமான பொறுப்பு என்று தெரியும்.

ஆனால் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேர்தல் அறிவிப்பு வரும்போது கூட்டணி இடங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு வகிப்பதால், எங்கள் மீதான பொறுப்பு கூடியிருக்கிறது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சியை வழங்குவதும், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் எங்களது முதன்மை இலக்குகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்பது மிக முக்கியமான மற்றும் பொறுப்புமிக்க பணியாகும். பெரும் தலைவர்கள் அலங்கரித்த இந்தப் பொறுப்பை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று கருதுகிறேன்.

ராகுல் காந்தி, விஜய்
ராகுல் காந்தி, விஜய்

தற்போது கிடைத்துள்ள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, 2 அமைச்சர்களின் துணையுடன் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவேன்.

என்னுடைய அடுத்த லட்சியம் என்பது ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது. மிகுந்த தன்னம்பிக்கையோடு நமது துவக்கம் இருக்கும். அடித்து விளையாடுவோம். காங்கிரஸ் கட்சியைப் பலமான இயக்கமாக மாற்றுவோம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

”அடுத்த சட்டமன்றத் தொடரில் Dance Performance இருக்கும்” – முதல்வர் விஜய்யைச் சாடிய உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளில் இரண்டு திமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணம்...

Karnataka: “నిన్ను చంపి నేను చస్తా”.. ఎక్స్ లవర్‌ని చంపేందుకు ప్లాన్.. కట్‌చేస్తే..

Karnataka: కర్ణాటకలోని తుమకూరు జిల్లా జాతీయ రహదారిపై శనివారం ఓ భయంకరమైన...

ಪ್ರತಿ ವರ್ಷ ಬೆಂಗಳೂರಿನ ಒಂದೊಂದು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಕೆಂಪೇಗೌಡ ಜಯಂತಿ- ಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು, ಜೂನ್, 27,2026 (www.justkannada.in):  ಇನ್ಮುಂದೆ ಬೆಂಗಳೂರಿನ 28 ವಿಧಾನಸಭಾ...

ലെബനന്റെ പരമാധികാരം ഇസ്രഈലിന് മുമ്പില്‍ അടിയറവ് വെക്കുന്ന നീക്കം; ലെബനന്‍-ഇസ്രഈല്‍ കരാര്‍ തള്ളി ഹിസ്ബുല്ല

  ബെയ്‌റൂട്ട്: അമേരിക്കയുടെ മധ്യസ്ഥതയില്‍ ലെബനനും ഇസ്രഈലും തമ്മില്‍ വാഷിങ്ടണില്‍ വെച്ച്...