19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

இடைத்தேர்தலுக்குத் தயாராகும் ஈரோடு, திருப்பூர்; மீண்டும் களமிறங்கும் அலுவலர்கள்!

Date:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சத்யபாமா உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க- வில் இணைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே மாதத்தில் தங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. மேற்கொண்ட சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை அரசு அலுவலர்கள் தொடங்கி உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

இடைத்தேர்தல் பணிகள்

இடைத்தேர்தல் குறித்து தெரிவித்த ஈரோடு மாவட்ட அதிகாரிகள், ” பெருந்துறை தொகுதியில் 292 வாக்குப்பதிவு மையங்கள் உள்ள நிலையில், 200 சதவிகித இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. 584 இயந்திரங்கள் , வி.வி.பேட் ஆகியவற்றை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெல் நிறுவனத்தில் இருந்து 6 பொறியாளர்கள் வந்து இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்த்து வருகின்றனர். இடைத்தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகள் தொடங்க இருக்கின்றன” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സി.പി.ഐ.എമ്മും ലീഗും കോണ്‍ഗ്രസും പിന്തുണയ്ക്കുന്ന സര്‍ക്കാര്‍; പക്ഷേ തമിഴ്നാട്ടില്‍ ഇസ്രാഈല്‍ റഡാറുകള്‍ നിര്‍മിക്കാനൊരുങ്ങുന്നു

ചെന്നൈ: തമിഴ്നാട്ടിലെ കൃഷ്ണഗിരി ജില്ലയില്‍ ഇസ്രഈല്‍ സര്‍ക്കാര്‍ ഉടമസ്ഥതയിലുള്ള ഇസ്രഈല്‍ എയ്റോസ്പേസ്...

7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! – MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?

சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்....

JK EXCCLUSIVE: 10 ವರ್ಷಗಳ ಗುತ್ತಿಗೆ ಅವಧಿ ಪೂರ್ಣಗೊಂಡ ನಿವೇಶನಗಳಿಗೆ ಕ್ರಯಪತ್ರ

  ಬೆಂಗಳೂರು/ಮೈಸೂರು: ಮೈಸೂರು ನಗರಾಭಿವೃದ್ಧಿ ಪ್ರಾಧಿಕಾರ (ಮುಡಾ) ವತಿಯಿಂದ 2005ರ ನಂತರ...