19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

'மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி; நலத்திட்டங்களுக்கு மட்டும் 25,000 கோடி.!' -அரசின் வெள்ளை அறிக்கை

Date:

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

முதல்வர் விஜய்

அந்தவகையில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை 5.30 மணிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். தற்போது தமிழகத்தின் நிதிநிலையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

வெள்ளை அறிக்கையில்…

* கடந்த திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு.

* வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம்.

* 2021-26-ல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி.

* வருவாய் பற்றாக்குறை 78,234 கோடியாக உயர்ந்திருக்கிறது.

* மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலுவை கடன் 28.3% ஆக இருக்கிறது.

* தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடி

* மொத்த வருவாயில் 22.8% தொகை வட்டிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது.

* அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் 13.8 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை அதிகரிக்கிறது.

நிதியமைச்சர் மரியவில்சன்
நிதியமைச்சர் மரியவில்சன்

* 1,28,934 ரூபாய் – தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரின் மேலும் உள்ள கடன் சுமை.

* ஒரு காலத்தில் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிவு.

* 2025-26 நிதியாண்டில் மட்டும் 67,050 கோடியை கடனுக்கான வட்டியாக மட்டுமே செலவளித்திருக்கிறோம்.

* அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் 13.8 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை அதிகரிக்கிறது.

* சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளில் பெற்ற கடனை விட இரட்டிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் கடன் வாங்கியிருக்கின்றனர்.

* சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டிகே செலவாகிறது.

* மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஜிஎஸ்டிபியில் 5.45 % ஆக குறைவு.

வெள்ளை அறிக்கை  வெளியீடு
வெள்ளை அறிக்கை வெளியீடு

* பெருமளவு கனிமவள ஆதாரம் இருந்தும் வருவாய் இல்லை.

* கனிமவளத் துறை ஊழலால் வருவாய் இழப்பு.

* ஆண்டு வட்டிக்காக மட்டுமே 67, 050 கோடி செலவிடப்படுகிறது.

* உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு மேலும் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் அதிகமாக செலவிட வேண்டியிருக்கிறது. இது ஆண்டுக்கு 10% என்கிற ரீதியில் அதிகமாகிக் கொண்டே போகும்.

* தமிழகத்தில் பிறக்கும் குழந்தை, இணை மாநிலங்களை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.

* வருவாய் வரவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் புதிய திட்டங்களுக்கு கூடுதல் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

* பொதுத்துறை நிறுவனக் கடன் மொத்தம் ரூ. 13.81லட்சம் கோடி.

* ஒவ்வொரு 1 ரூபாய் மூலதனச் செலவுக்கும் புதிதாக ரூ.2.26 கடனாகப் பெறப்படுகிறது.

* மூலதனச் செலவை விட கடன் அளவு இரட்டிப்பு வேகம்.

வெள்ளை அறிக்கை  வெளியீடு
வெள்ளை அறிக்கை வெளியீடு

* மின்வாரியத்தில் ரூ. 1,82, 361 கோடி இழப்புகள்.

* மக்கள் தொகை பரிணாமத்தின்படி பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் முன்னரே முதுமையடையும் நிலை.

* 2031 இல் தமிழகத்தின் முதியோர் மக்கள் தொகை 18.2% ஆக உயரும்.

* செல்வந்தர் மாநிலமாக மாறும் முன்பே முதியோர் மாநிலமாக மாறிவிடுவோம்.

* புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருப்பதுதான் பிரச்னை.

* மகளிர் உரிமைத் திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை வருவாய் பெருக்க நடவடிக்கையின்றி மேற்கொள்ளப்பட்டவை.

* நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவினம். அதற்கு இணையாக வருவாய் பெருக்கம் இல்லை.

* நிதி சீரமைப்பில் தோல்வி.

“இனி வரும் நாட்கள் சாவாலானவை, ஊழற்ற நிர்வாகத்தின் மூலம் வருவாய் இழப்பை சரிசெய்வோம். ஊழலை ஒழிப்பதன் மூலம் அரசின் வருவாயை உயர்த்த முடியும்” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மரிய வில்சனிடம் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதலளித்த அவர், ” முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்” என்றிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നീറ്റ് ക്രമക്കേട്; ആത്മഹത്യ ചെയ്ത കുട്ടികളുടെ കുടുംബങ്ങള്‍ക്ക് ഒരു കോടി രൂപ നഷ്ടപരിഹാരം നല്‍കണം: മോദിക്ക് തുറന്ന കത്തുമായി സി.ജെ.പി

ന്യൂദല്‍ഹി: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിക്ക് തുറന്ന കത്തുമായി കോക്രോച്ച് ജനതാ പാര്‍ട്ടി...

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை…அத்தனையும் உருட்டா சார்! – அதிமுக கேள்வி

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில்...

ಮೊಬೈಲ್ ಕಸಿದು ಪರಾರಿಯಾಗಲು ಯತ್ನಿಸಿದ್ದ ಕಳ್ಳ ಸ್ಥಳದಲ್ಲೇ ಸಾವು

ಬೆಂಗಳೂರು, ಜೂನ್​​,19,2026 (www.justkannada.in):  ಮೊಬೈಲ್ ಕದ್ದು ಬೈಕ್ ನಲ್ಲಿ ಪರಾರಿಯಾಗುತ್ತಿದ್ದ...