15
June, 2026

A News 365Times Venture

15
Monday
June, 2026

A News 365Times Venture

`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' – அண்ணாமலை

Date:

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ந்து சட்ட ஒழுங்கு சிக்கல்கள் நீடிப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆரவலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் விஜய் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை அலட்சியமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இது தொடர்பாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அண்ணாமலை

அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய்
விஜய்

குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?

தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ശബരിമല സ്വര്‍ണക്കൊള്ള: പത്മകുമാറിനെ പ്രാഥമിക അംഗത്വത്തില്‍ നിന്ന് സസ്‌പെന്‍ഡ് ചെയ്ത് സി.പി.ഐ.എം

പത്തനംതിട്ട: ശബരിമല സ്വര്‍ണക്കൊള്ള കേസിലെ പ്രതിയും മുന്‍ എം.എല്‍.എയും സി.പി.ഐ.എം നേതാവുമായ...

“6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (15.06.2026) முதல்வர் ஜோசப் விஜய்...

Southwest Monsoon: రాష్ట్రవ్యాప్తంగా విస్తరించిన నైరుతి రుతుపవనాలు.. పిడుగులతో కూడిన వర్షాలకు హెచ్చరిక

Southwest Monsoon: ఆంధ్రప్రదేశ్‌లో నైరుతి రుతుపవనాలు పూర్తిస్థాయిలో విస్తరించినట్లు రాష్ట్ర విపత్తుల...

RSS ಬಗ್ಗೆ ಜನರಲ್ಲಿ ಅನುಮಾನ ಮೂಡಿಸುವ ಕೆಲಸ ಇನ್ಮುಂದೆ ಸಾಧ್ಯವಿಲ್ಲ- ಮೋಹನ್ ಭಾಗವತ್ ತಿರುಗೇಟು

ತ್ರಿಶೂರ್,ಜೂನ್,15,2026 (www.justkannada.in): ಆರ್ ಎಸ್ಎಸ್ ಬಗ್ಗೆ ಜನರಲ್ಲಿ ಅನುಮಾನ ಮೂಡಿಸುವ...