31
May, 2026

A News 365Times Venture

31
Sunday
May, 2026

A News 365Times Venture

Vijay: "மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது" – துரை வைகோ

Date:

“தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாகப் பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும்” என்று திருச்சி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, தவெகவிற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “பெரியார், அண்ணா கொள்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுகிறார்.

முதல்வர் விஜய்

திமுக, அதிமுகவுடன் இன்னொரு திராவிட இயக்கமாகத்தான் தவெகவைப் பார்க்கிறோம்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது.

அக்கட்சி ஜாதி, மத, பண அரசியலைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது புதிய நம்பிக்கையைத் தருகிறது.

புதிய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். குறிப்பாக, காங்கிரஸிடம் இருந்து தமிழகத்தில் ஆட்சியை திமுக கைப்பற்றியபோது ஏற்பட்ட நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தவெக அரசுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளித்ததும், கூட்டணி அரசு அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

துரை வைகோ
துரை வைகோ

மதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதைக் கூற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ശിവകുമാര്‍ ഭരണമേല്‍ക്കുമ്പോള്‍ മിഷന്‍ കര്‍ണാടകയുമായി ബി.ജെ.പി; പ്രഹ്ലാദ് ജോഷിയടക്കം കര്‍ണാടകയിലേക്ക്, വമ്പന്‍ അഴിച്ചുപണി

  ബെംഗളൂരു: കര്‍ണാടകയില്‍ കോണ്‍ഗ്രസ് സര്‍ക്കാരിലെ അധികാര കൈമാറ്റത്തിനിടെ, നേതൃനിരയിലടക്കം സംസ്ഥാനത്തെ...

West Bengal: “రాళ్లతో కొట్టారు?”.. టీఎంసీ ఎంపీ కల్యాణ్ బెనర్జీపై దాడి

West Bengal: పశ్చిమ బెంగాల్‌లోని హుగ్లీ జిల్లాలో గల చండీతలా పోలీస్...

ಡಿಕೆಶಿ ಜೊತೆ  14 ಮಂದಿ ಪ್ರಮಾಣ ವಚನ ಸ್ವೀಕಾರ ಸಾಧ್ಯತೆ: ಸಂಭಾವ್ಯ ಸಚಿವರ ಪಟ್ಟಿ ಹೀಗಿದೆ..?

ಬೆಂಗಳೂರು, ಮೇ,30,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದ ನೂತನ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್...

നീറ്റിനും സി.ബി.എസ്.ഇക്കും പിന്നാലെ ബിരുദ പ്രവേശന പരീക്ഷയും താളം തെറ്റി, നോക്കുകുത്തിയായി എന്‍.ടി.എ

ന്യൂദല്‍ഹി: നീറ്റ് യു.ജി പരീക്ഷാ ക്രമക്കേടുകള്‍ക്ക് പിന്നാലെ, രാജ്യത്തെ കേന്ദ്ര സര്‍വകലാശാലകളിലേക്കുള്ള...