18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

"எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்து விட்டது" – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

Date:

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. முதல்வர் ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார். 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்குப் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பது எனத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

டாஸ்மாக் கடைகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை அறிந்து, பேருந்து நிலையம், ஆலயம் ஆகிய இடங்களில் இருக்கக்கூடாது என 717 கடைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் பெரிய சாதனை. பொறுப்பேற்றவுடன் இவ்வளவு சாதனைகள் செய்திருப்பது இந்தியாவில் இவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது, ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரது இயக்கம் (அதிமுக) அவரால் வலுவிழுந்து இருக்கிறது என்றுதான் குறிப்பிட முடியும். தான் ஒருவர் மட்டும் போதும் என்று அவர் நினைக்கிறார்” என்றார்.

செங்கோட்டையன்

10 பேருக்கு மட்டும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, “அமைச்சரவை என்பது இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இருக்கும்போது, ஏழு பேரைத்தான் முதலில் அமைச்சர்களாகப் போட்டார்கள். பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதேபோல அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்” எனப் பதிலளித்தார்.

கஜானா காலி என விஜய் சொல்லி இருக்கும் நிலையில் நிதியமைச்சரான உங்களுக்கு நெருக்கடி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “நெருக்கடிகளைச் சமாளிக்கிற திறமை த.வெ.க. தலைவர், நிரந்தர முதல்வர் விஜய்யால் முடியும்.

பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்துதான் தெளிவான விளக்கம் சொல்ல முடியுமே தவிர நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അമേരിക്കയും ഇസ്രഈലും മുസ്‌ലിം രാജ്യങ്ങളെ ശത്രുക്കളാക്കുന്നു; സയണിസ്റ്റ് ഭരണകൂടത്തിനെതിരെ ഒരുമിച്ച് നില്‍ക്കണമെന്ന് പെസസ്‌കിയാന്‍

ടെഹ്‌റാന്‍: അമേരിക്കയും ഇസ്രഈലും ഭിന്നിപ്പിക്കുന്ന പദ്ധതികളിലൂടെ മുസ്‌ലിം രാഷ്ട്രങ്ങളെ പരസ്പരം ശത്രുക്കളാക്കുകയാണെന്ന്...

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' – என்னவாகும் போர் நிறுத்தம்?

சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது...

വേദിയിൽ മുഖ്യമന്ത്രിയും മന്ത്രിമാരും മാത്രം മതി; സത്യപ്രതിജ്ഞയിൽ കടുത്ത നിയന്ത്രണങ്ങളേർപ്പെടുത്തി ലോക് ഭവൻ

തിരുവനന്തപുരം: നിയുക്ത മുഖ്യമന്ത്രി വി.ഡി. സതീശനും മന്ത്രിസഭയും നാളെ സത്യപ്രതിജ്ഞ ചെയ്യാനിരിക്കെ...