12
July, 2026

A News 365Times Venture

12
Sunday
July, 2026

A News 365Times Venture

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக?; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு?

Date:

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்டதும் அந்த 11 சீட்டுகளைத் தான்.

ஆக, 11 சீட்டுகளுக்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஐக்கிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது தவெக.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

காங்கிரஸ் நேற்றே தவெகவிற்கு ஆதரவு அளித்துவிட்டது. அதில் தவெகவிற்கு 112 சீட்டுகள் கிடைத்துவிட்டன.

தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், விசிகவின் ஆதரவை கேட்டு வந்தது தவெக. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இன்று மதியம் ஆதரவு அளித்துவிட்டன.

இதையடுத்து, உயர்நிலைக் குழு கூட்டத்தை நடத்தி முடிவைக் கூறுவதாக தெரிவித்திருந்தது விசிக. ஆனால், கால தாமதம் ஆகிக்கொண்டே போனது.

இன்னொரு பக்கம், ஆளுநரை சந்திக்க விஜய் கிளம்பிவிட்டார். இந்த வேளையில், தவெக காய்களை நகர்த்தி முஸ்லீம் லீக் கட்சியின் இரண்டு சீட்டுகளைப் பெற நினைத்தது தவெக.

ஆளுநரை சந்தித்த விஜயோ, ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.

இந்தக் காட்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, விசிக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்து, தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதனால், தற்போது தவெகவிற்கு 120 சீட்டுகள் கிடைத்துள்ளன.

விசிக தலைவர் திருமாவளவன் முன்னரே சொல்லியிருந்ததுப் போல, நாளை ஆதரவு கடிதம் வழங்குகிறார் என்றும், இன்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்தத் தகவலில் தற்போது குழப்பம் நீடிக்கிறது.

விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, “ஆட்சியிலும் பங்கு

அதிகாரத்திலும் பங்கு

இது திருமா காலம்-இனி

உயர்வோம் மேலும் மேலும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘കോടതിയാകാന്‍ ശ്രമിക്കേണ്ട’; ലൈംഗികാതിക്രമ പരാതിയില്‍ നടപടിയെടുക്കാത്തതിനെ ന്യായീകരിച്ച് സുരേഷ് ഗോപി

ന്യൂദല്‍ഹി: കൊല്‍ക്കത്ത സത്യജിത് റായ് ഫിലിം ആന്‍ഡ് ടെലിവിഷന്‍ ഇന്‍സ്റ്റിറ്റ്യൂട്ടിലെ (എസ്.ആര്‍.എഫ്.ടി.ഐ)...

பெங்களூரு: “சில்லறை இல்லை…'' – அமைச்சரையே பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்!

பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளைக் கண்டறிய, கர்நாடக...

ಶಾಶ್ವತ ವಾಸಸ್ಥಳ ಪ್ರಮಾಣಪತ್ರ ನೀಡುವುದರಲ್ಲಿ ತಪ್ಪೇನಿದೆ? ಬಿಜೆಪಿಗೆ ಡಿಸಿಎಂ ಪರಮೇಶ್ವರ್ ತಿರುಗೇಟು

ಬೆಂಗಳೂರು, ಜುಲೈ 11,2026 (www.justkannada.in): ಶಾಶ್ವತ ವಾಸಸ್ಥಳ ಪ್ರಮಾಣಪತ್ರ ನೀಡುವುದಕ್ಕೆ...