19
April, 2026

A News 365Times Venture

19
Sunday
April, 2026

A News 365Times Venture

’தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பொய்யர்கள்’ – கோவையில் தேஜஸ்வி யாதவ் காட்டம்

Date:

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, “பெண்கள்  இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே  நிறைவேற்றப்பட்டு விட்டது. தொகுதி மறுவரையறை என்பது தனி விவகாரம். இதனை 2029 ஆண்டில் நடைமுறைபடுத்துவோம் என சொன்னார்கள். முதலில் சாதி வாரிகணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2011 அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரை செய்யக் கூடாது. 2021 – 25 இடையே மக்கள் தொகை கூடி இருக்கின்றது. பொதுப்பிரிவு, பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்ற முடியாது என மத்திய அரசுக்கு தெரியும்.  அதற்கான பெரும்பான்மை அவர்களிடம் இல்லை. ஆனால் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், நாங்கள் எதிராக இருப்பதை போலவும் காட்ட இதை செய்து இருக்கின்றனர். ஆனால் இது உண்மையல்ல.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இதுவரை தலைவராக எத்தனை பெண்கள் இருந்திருக்கின்றனர்? அவர்கள் செய்வது வெறும் அரசியல் மட்டும்தான், அவர்களுக்கு அரசியலைமைப்பு தேவையில்லை.ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை திணிக்க பார்க்கின்றனர், இதை நாங்கள் கட்டாயம் எதிர்ப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் பேச்சை கேட்க வேண்டியதில்லை, அவர்கள் பொய்யர்கள். நாட்டிற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி மணியடித்து, பூசை செய்வார், அவ்வளவுதான்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

രാജ്യത്തെ സ്ത്രീകളോട് മാപ്പുചോദിക്കുന്നു; പ്രതിപക്ഷത്തിന് തക്കതായ ശിക്ഷ ലഭിക്കും; രാജ്യത്തെ അഭിസംബോധന ചെയ്ത് പ്രധാനമന്ത്രി

ന്യൂദൽഹി: മണ്ഡല പുനർനിർണയ, വനിതാ സംവരണ ബില്ലുകൾ പരാജയപെട്ടതിന് പിന്നാലെ രാജ്യത്തെ...

Delimitation: "மதுரை கோடை வெயிலில் வெள்ளைச் சட்டைக்கு மீண்டும் மாறியதில் மகிழ்ச்சி" – PTR

நேற்று நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததையொட்டி, தமிழ்நாடு தகவல்...

Yuzvendra Chahal: ‘క్యూట్’ మెసేజ్ వివాదం.. చాహల్ తానియా ఛటర్జీపై పరువు నష్టం దావా వేసిన చాహల్

భారత క్రికెట్ జట్టు లెగ్ స్పిన్నర్ యుజ్వేంద్ర చాహల్ ప్రస్తుతం పంజాబ్...

ಮಹಿಳಾ ಮೀಸಲಾತಿಗೆ ನಮ್ಮ ವಿರೋಧವಿಲ್ಲ: ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು, ಏಪ್ರಿಲ್ ,18,2026 (www.justkannada.in): ಮಹಿಳಾ ಮೀಸಲಾತಿಗೆ ನಮ್ಮ ವಿರೋಧವಿಲ್ಲ...