18
April, 2026

A News 365Times Venture

18
Saturday
April, 2026

A News 365Times Venture

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

Date:

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதாவது,

* பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப்பின் 131-வது திருத்த மசோதா

* மக்களவை, சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்யும் மசோதா 2026 (Delimitation)

* யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகியவை மத்திய அரசு தாக்கல் செய்த 3 மசோதாக்கள்.

ராகுல் காந்தி

இந்த மசோதாக்களுக்கும் அறிமுக நிலையிலேயே காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன.

இந்த 3 மசோதாக்கள் மீது இன்று மாலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்திருக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 பெரும் வாக்களித்திருக்கின்றனர். அதன்படி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறவில்லை.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்டாலின், ” டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் அதற்குத் துணைபோகும் அடிமைகளையும் ஏப்ரல் 23-ம் தேதி ஒன்று சேர்ந்து வீழ்த்துவோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വാല്‍പ്പാറ അപകടം: വിയോഗം നാടിനാകെ നികത്താനാവാത്ത നഷ്ടം, കുടുംബങ്ങളുടെ ദുഃഖത്തില്‍  പങ്കുചേരുന്നു; അനുശോചിച്ച് മുഖ്യമന്ത്രി

  തിരുവനന്തപുരം: വാല്‍പ്പാറയില്‍ മിനി വാന്‍ അപകടത്തില്‍പ്പെട്ട സംഭവത്തില്‍ അനുശോചനം രേഖപ്പെടുത്തി...

Kids Wellness : పిల్లల ఆరోగ్యం పదిలంగా ఉండాలంటే.. ఈ హెల్త్ టెస్టులు తప్పనిసరి.!

పిల్లలే రేపటి పౌరులు, వారి ఆరోగ్యంపై పెట్టే శ్రద్ధ వారు ఆరోగ్యవంతమైన...

ಕರ್ನಾಟಕ ಲೋಕಾಯುಕ್ತದ ನಾಲ್ಕು ದಶಕಗಳ ಸಾರ್ಥಕ ಪಯಣ: ಏ.18 ರಂದು ವಿಶೇಷ ಕಾರ್ಯಕ್ರಮ

ಬೆಂಗಳೂರು, ಏಪ್ರಿಲ್ ,16 ,2026 (www.justkannada.in): ಭ್ರಷ್ಟಾಚಾರ ನಿರ್ಮೂಲನೆ ಮತ್ತು...

സ്ത്രീകളുടെ ക്രോധം നിങ്ങളറിയും; ഡി.എം.കെ അടക്കമുള്ള പ്രതിപക്ഷ കക്ഷികള്‍ക്കെതിരെ അമിത് ഷാ

ന്യൂദല്‍ഹി: വനിതാ സംവരണ ഭേദഗതി ബില്‍ പരാജയപ്പെട്ടതിന് പിന്നാലെ പ്രതിപക്ഷ പാര്‍ട്ടികള്‍ക്കെതിരെ...