31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? – சு.வெ

Date:

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், “விகடனுடைய ‘பெருந்தமிழர்’ விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின் ஒரு பேரறிஞர். இயக்குநர் ராம் கூறியதைப்போல, நாங்கள் எல்லோரும் அவருடைய மாணவர்கள். மாணவர்கள் என்றால் பின்தொடர்பவர்கள் அல்ல; விவாதிப்பவர்கள், உரையாடுபவர்கள், முட்டி மோதுபவர்கள்.

சு.வெங்கடேசன்

அவருடைய ‘அந்நியமாதல்’ புத்தகம் 20 வருடங்களாக எங்களைச் சுற்றிவருகிறது. அவர்மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா… ஒரு பேரறிஞருக்கு மகிழ்ச்சி என்பது விருது அல்ல; அவர் இயங்கிக்கொண்டிருப்பதுதான் மகிழ்ச்சி. இன்றைக்கு வரை இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு பேரறிஞர் எஸ்.வி.ஆர்.

மேலும், தமிழ் அறிவுச் சூழலில் ஒரு தசாப்தத்தின் வரலாற்றைத் தன் எழுத்துகளால் செதுக்கியவர். அதிகாரத்துக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கும் அவரது குரல், இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇറാന്‍ നാവികസേന ഇപ്പോഴും ജീവനോടെയുണ്ട്; ട്രംപിന്റെ അവകാശവാദത്തിനെതിരെ ഇറാന്‍ നാവിക സേന കമാന്‍ഡര്‍

ടെഹ്‌റാന്‍: ഇറാന്റെ നാവികസേന ഇപ്പോഴും നിലനില്‍ക്കുന്നുവെന്നും അതിന് പ്രശ്‌നങ്ങളില്ലെന്നും ഇറാന്‍ നാവിക...

"தமிழக சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் செளமியா அன்புமணி!" – புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாகவும், பெரிய விமான நிலையம்...

ರಾಜೇಂದ್ರ ಸ್ವಾಮಿಗಳು ಸಮಾಜ ಸುಧಾರಣೆ, ಜಾತಿ ವ್ಯವಸ್ಥೆ ಹೋಗಲಾಡಿಸುವ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದಾರೆ- ಮಾಜಿ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್,29,2026 (www.justkannada.in): ಶಿವರಾತ್ರಿ ರಾಜೇಂದ್ರ ಮಹಾಸ್ವಾಮಿಗಳು ಸಮಾಜದಲ್ಲಿ ಸುಧಾರಣೆ ತರಲು,...