28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" – மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

Date:

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் – காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் வரி விதிப்பால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா – அமெரிக்க அரசுகள் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த ட்விட்டர் பதிவில், “எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்புடன் பேசினேன். வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி திட்டத்துக்காக அவரை வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம். வரவிருக்கும் வாரங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளார்.” எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரத்தில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

காசா

ட்ரம்ப் வழிகாட்டுதலின்படி பணயக்கைதிகளை ஒப்படைக்கும் முறையை உருவாக்குவதில் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போரைத் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த முன்னேற்றம் அமைதியைக் கோருவோருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

SSLC ಫಲಿತಾಂಶದಲ್ಲಿ ಹಿಂದಿಯನ್ನು ಪರಿಗಣಿಸದಿರಲು ತೀರ್ಮಾನ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು, ಮಾರ್ಚ್, 28, 2026 (www.justkannada.in): ಈ ವರ್ಷದಿಂದಲೇ ಎಸ್...

പശ്ചിമേഷ്യന്‍ സംഘര്‍ഷം: മോദിയും ട്രംപും നടത്തിയ ടെലിഫോണ്‍ സംഭാഷണത്തില്‍ മസ്‌കും പങ്കുചേര്‍ന്നെന്ന് റിപ്പോര്‍ട്ട്; തള്ളി ഇന്ത്യ

ന്യൂദല്‍ഹി: ഇറാനില്‍ യു.എസും ഇസ്രഈലും നടത്തുന്ന ആക്രമണത്തെ സംബന്ധിച്ച് യു.എസ് പ്രസിഡന്റ്...

வேடசந்தூர்; செ., பாலாஜி ஆதரவாளருக்கு டிக் அடித்த திமுக; சிட்டிங் எம்எல்ஏ ஓரங்கட்டப்பட்ட பின்னணி!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில்...

Lenin: పెద్ది కోసం వెనక్కి తగ్గిన అయ్యగారు!

అక్కినేని అఖిల్ హీరోగా, మురళీకృష్ణ అబ్బూరు దర్శకత్వంలో ‘లెనిన్’ అనే సినిమా...