29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

Date:

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் ‘பேக் வெட்டிங்’ இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன.

திருமண விழா கொண்டாட்டத்தை திருமணம் ஏதும் நடைபெறாமலே போலியாக நடத்தி, திருமணத்தில் பங்கேற்பதைப் போன்ற ஆடைகள், விருது, வரவேற்பு, கொண்டாட்டம் என வெளிநாடுகளில் இந்த நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இது பரவி வருகிறது. இளைஞர்கள் நண்பர்கள், உறவினர்களின் திருமணத்திற்குச் சென்று கொண்டாடி மகிழ்வைப்போல இதில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஃபேக் வெட்டிங் போஸ்டர்

இந்நிலையில் இது கலாசார சீரழிவு என்று கண்டித்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “சேலம் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறி செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது.

அதாவது, மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமைகளை கல்வி, விளையாட்டு, கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை, புதுமைகளை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துதல், திறமைகளை வெளிப்படுத்துதல் போன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தினால், அது எதிர்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஆனால், வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரால் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமும் ஆடல், பாடல் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும், ‘ஃபேக் வெட்டிங்க்’ மற்றும்ம் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் வணிக நோக்கமும், கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இதன் காரணமாக, சேலத்தில் இன்று நடைபெறும், ‘ஃபேக் வெட்டிங்க்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில், காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனைக்கருத்தில் கொண்டு, தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் “ ஃபேக் வெட்டிங்க்” நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தடை விதித்து, வருங்கால சந்ததியினர் வளமாக வாழ வழி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று எக்ஸ் தளத்தில் கண்டித்திருக்கிறார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഹൂത്തികളും ആക്രമണം ആരംഭിച്ചതോടെ കൂടുതല്‍ സേനയെ വിന്യസിക്കാന്‍ യു.എസ്; 2500 നാവികര്‍ പശ്ചിമേഷ്യയിലെത്തി; റിപ്പോര്‍ട്ട്

വാഷിങ്ടണ്‍: ഇറാനെതിരായ യു.എസ്, ഇസ്രഈല്‍ ആക്രമണത്തെ പ്രതിരോധിക്കാനായി യെമനിലെ വിമതസേനയായ ഹൂത്തികള്‍...

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது....

Kamada Ekadashi 2026: కోరిన కోరికలు తీర్చే కామదా ఏకాదశి.. ఈ కథను పఠిస్తే జన్మ జన్మల పాపాల నుండి మోక్షం

కామదా ఏకాదశి అనేది హిందూ ధర్మంలో చాలా పవిత్రమైన ఏకాదశి. ఇది...

ಮೈಸೂರಿನಲ್ಲಿ ಅವೈಜ್ಞಾನಿಕ ಟ್ರಾಫಿಕ್ ಸಿಗ್ನಲ್ ಆರೋಪ: ಸ್ಪಷ್ಟನೆ  ನೀಡಿದ ಸಚಿವ ಹೆಚ್.ಸಿ ಮಹದೇವಪ್ಪ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in): ಸಾಂಸ್ಕೃತಿಕ ನಗರಿ ಮೈಸೂರಿನಲ್ಲಿ ಅವೈಜ್ಞಾನಿಕ ಟ್ರಾಫಿಕ್ ಸಿಗ್ನಲ್...