21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு – எடப்பாடியின் அடுத்த அதிரடி

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்.

10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று நேற்று முன்தினம் (செப்.5) கறாராகப் பேசியிருந்தார்.

செங்கோட்டையன்

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் ‘அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும்’ என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார்.

செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அதிமுகவில் அவர் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்து விடுக்கப்பட்டார்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அவர் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருக்கிறார். ஆனால், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த முன்னாள் அதிமுக எம்.பி. சத்தியபாமாவின் பதவி பறிக்கபடாமல் இருந்தது.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்தியபாமா, ” அதிமுகவில் என் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக தொண்டர்கள், மக்களின் எண்ணங்களை செங்கோட்டையன் பிரதிபலித்திருக்கிறார். 2026 தேர்தலில் அதிமுக வென்றால்தான் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றலாம்” என்றார்.

எடப்பாடி நடவடிக்கை 

அவரின் இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு பின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருந்து சத்திய பாமாவை நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നോയിഡയ്ക്ക് പിന്നാലെ ഉത്തരാഖണ്ഡിലും തൊഴിലാളി സമരം: തുച്ഛമായ ശമ്പളവും 12 മണിക്കൂര്‍ തൊഴില്‍പീഡനവുമെന്ന് പരാതി

  ഹല്‍ദ്വാനി: നോയിഡയ്ക്ക് പിന്നാലെ ഉത്തരാഖണ്ഡിലെ വ്യാവസായ മേഖലകളിലും തൊഴിലാളി പ്രതിഷേധം...

தமிழ்நாடு தேர்தல்: இன்று 6 மணியோடு எல்லாம் 'க்ளோஸ்'- விதிப்படி எதற்கெல்லாம் 'நோ' – மீறினால்?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் கடைசி மணிநேர அனலில் இருக்கிறது.இன்று மாலை...

రూ.11 వేలలోపే పవర్‌ఫుల్ ఫీచర్స్ తో REDMI A7, A7 Pro లాంచ్..!

Redmi A7, A7 Pro Launched: షియోమీ (Xiaomi) భారత్‌ లో...

SSLC ಹಿಂದಿ ವಿಷಯಕ್ಕೆ ಗ್ರೇಡ್​​ ಬದಲು ಅಂಕವನ್ನೇ ನೀಡಿ: ಹೈಕೋರ್ಟ್ ಆದೇಶ

ಬೆಂಗಳೂರು, ಏಪ್ರಿಲ್​​ ,21,2026 (www.justkannada.in):  ಎಸ್ ಎಸ್ ಎಲ್ ಸಿ...