21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

"செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்" – புகழேந்தி காட்டம்!

Date:

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று கறாராக பேசிய அடுத்த நாளே கட்சியின் பொறுப்புகளிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.

அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையில் செங்கோட்டையனை பொறுப்பிலிருந்து நீக்கியதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுக பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்குக் கடிதம் அனுப்பி விலகி வருகின்றனர். இதுவரை ஈரோடு அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 2000 பேர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை செங்கோட்டையனை நேரில் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, “கட்சியின் நலனுக்காக நல்ல கருத்தை சொன்ன அண்ணன் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அராஜகமான செயல்.

அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒன்னும் சொந்தக்காரர் அல்ல. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் கட்சி, அதிமுக தொண்டர்களின் கட்சி. இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வேலுமணியும் பழனிசாமியோடு சேர்ந்து கட்சிக்கு எதிரக செயல்படுவது தவறானது. தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை இயக்குகிறார்கள்.

புகழேந்தி

மூத்த தலைவர்கள், உண்மையான தொண்டர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு தனியாக பழனிசாமி என்ன செய்யப்போகிறார்.

அதிமுகவின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் எங்கள் பக்கம்தான். உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து செங்கோட்டையன் பக்கம் நிற்கிறோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.പിയില്‍ ബി.ജെ.പി ഭരണത്തില്‍ തകര്‍ത്തത് 151 അബേദ്ക്കര്‍ പ്രതിമകള്‍: അഖിലേഷ് യാദവ്

ലഖ്‌നൗ: ബി.ജെ.പി ഭരണകാലത്ത് ഉത്തര്‍പ്രദേശില്‍ ഡോ. ബി.ആര്‍ അംബേദ്‌റുടെ 151 പ്രതിമകള്‍...

"தமிழ்நாடு, சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது.!"- உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார்....

No UPI-Only Cash: నో యూపీఐ ఓన్లీ క్యాష్.. దుకాణాల ముందు ప్రత్యక్షమవుతున్న బోర్డులు..

ఉత్తరప్రదేశ్‌లోని ఘజియాబాద్‌లో వ్యాపారులు కొత్త నిబంధనలకు వ్యతిరేకంగా వినూత్న నిరసనకు దిగారు....

ഹിന്ദു സംസ്‌കാരത്തെ അപമാനിക്കുന്നതും പാരമ്പര്യത്തെ തകര്‍ക്കുന്നതും; ഹിന്ദു വര്‍ഗീയതയ്‌ക്കെതിരായ ഹാമിദ് അന്‍സാരിയുടെ പരാമര്‍ശത്തിനെതിരെ യോഗി

ന്യൂഡല്‍ഹി: മുന്‍ ഉപരാഷ്ട്രപതി ഹമീദ് അന്‍സാരിയുടെ ‘ഹിന്ദു വര്‍ഗീയത’യുമായി ബന്ധപ്പെട്ട പരാമര്‍ശങ്ങള്‍ക്കെതിരെ...