27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

“அதிமுக-வில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது”-வைத்திலிங்கம்!

Date:

ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள், இதைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள்.

அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார். அது வரவேற்கத்தக்கது.

வைத்திலிங்கம்

செங்கோட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருடைய நல்ல மதிப்பை பெற்றவர். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் சொன்னதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவருக்கு அதிமுகவில் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

அவருடைய எண்ணம் போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள் நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள். பத்து நாள் கெடு கொடுத்திருக்கார் இல்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவார் என்பதே அதன் அர்த்தம்.

செங்கோட்டையன் பிரஸ் மீட்

பத்து நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவிப்பேன். கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றிணை வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதிமுக மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள் என்பது என் எண்ணம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗ്യാനേഷ് കുമാറിനെതിരായ രാജ്യവ്യാപക പ്രതിഷേധം; സി.ജെ.പിക്ക് പിന്തുണ പ്രഖ്യാപിച്ച് സോനം വാങ്ചുക്ക്

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി ആവശ്യപ്പെട്ട് കോക്രോച്ച്...

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி...

OTR: తెలంగాణపై బీజేపీ స్పెషల్ ఫోకస్

OTR: తెలంగాణ బీజేపీ ఫోకస్‌ షిఫ్ట్‌ అవుతోందా? తాత్కాలికంగా కార్యక్షేత్రం మారబోతోందా?...

ട്രംപ്-ഷി കൂടിക്കാഴ്ച: വ്യാപാര യുദ്ധത്തിന് താത്ക്കാലിക ശമനം; 30 ബില്യണ്‍ ഡോളറിന്റെ താരിഫ് ഇളവിന് ധാരണ

വാഷിങ്ടണ്‍: അമേരിക്കയും ചൈനയും തമ്മിലുള്ള വ്യാപാര സംഘര്‍ഷത്തിന് താത്ക്കാലിക ശമനമെന്ന് റിപ്പോര്‍ട്ട്....