29
August, 2026

A News 365Times Venture

29
Saturday
August, 2026

A News 365Times Venture

ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள்… புதிய குழப்பங்களை உண்டாக்காமல் இருக்கட்டும்!

Date:

சமீபத்திய சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியபடியே, 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி, வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 5%, 18% என இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு 8 வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை ஜி.எஸ்.டி கவுன்சில் 56 முறை கூடி ஆலோசித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்படும் மாற்றங்கள்… புதிய குழப்பங்களும், புதிய குளறுபடிகளுமாகத்தான் இருந்திருக்கின்றன.

இதனால், பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் வரித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டதோடு அல்லாமல், நாட்டின் வளர்ச்சியும் கணிசமாகப் பாதிப்புக்குள்ளானது. இது தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளையும், விமர்சனங்களையும், கண்டனங்களையும் ஏறெடுத்தும் பார்க்காத மத்திய அரசு, திடீரென ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

‘‘இத்தனை ஆண்டுகளாக மெத்தனமாக இருந்த அரசு, இப்போது இந்த மாற்றத்தைக் கொண்டு வர என்ன காரணம்? பொருளாதார மந்த நிலையா, கடன் அதிகரிப்பா, குடும்பங்களின் சேமிப்புக் குறைவதா, பீகார், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களா, ட்ரம்ப்பின் வரி விதிப்பா அல்லது இவை எல்லாமுமா?’’ என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுப்பியுள்ள கேள்விகள், பலருக்குமே எழத்தான் செய்கின்றன.

ஆனாலும், “அவற்றையெல்லாம் தாண்டி இந்த ஜி.எஸ்.டி சீர்திருத்தம் வரவேற்க வேண்டிய ஒரு விஷயமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பு, வருமானம் எல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், விலைவாசி உயர்வால் மக்கள் அத்தியாவசிய பொருள்களுக்கே அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. கடன் சுமைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சேமிக்கவும், காப்பீடு எடுக்கவும்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் இந்த ஜி.எஸ்.டி குறைப்பு நல்ல தீர்வைக் கொடுக்கும். அதேசமயம், இதன் எதிர்விளைவாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2024-25 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல். வரி வருவாய்தான் அரசுகளின் நலத்திட்டங்களுக்கும், உள்கட்டமைப்புச் செலவினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, இந்த வரி வருவாய் குறைவதன் மூலம் ஏற்படவிருக்கும் எதிர் விளைவுகளை எல்லாம் மத்திய அரசு ஏற்கெனவே யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த வரிக் குறைப்பின் பலன், மக்களுக்குச் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். இல்லாவிட்டால், புதிய குழப்பங்கள் உருவாவதைத் தவிர்க்கவே முடியாது!

– ஆசிரியர்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ട്രംപ് ഭരണകൂടത്തിലെ ചിലര്‍ ആഗോള ഊര്‍ജ വിപണിയെ സ്വാധീനിക്കാന്‍ ഇടപെടുന്നതായി അരാഗ്ചി

ടെഹ്‌റാന്‍: യു.എസിലെ ഡൊണാള്‍ഡ് ട്രംപ് ഭരണകൂടത്തിലെ ചിലര്‍ ആഗോള ഊര്‍ജ വിപണികളെ...

"மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது"- விஜய் குறித்து தமிழிசை

இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறி வருகின்றனர்....

Ram Mohan Naidu: ‘పీ4’ విధానంలో శ్రీకాకుళం జిల్లాకు ‘ఎ’ గ్రేడ్.. ప్రశంసించిన కేంద్ర మంత్రి..

రెండేళ్లలో నేరిడి బ్యారేజీ పూర్తి చేసి తీరతామని కేంద్ర పౌర విమానయాన...

ಗೃಹಲಕ್ಷ್ಮಿಗೆ ಮೂರು ವರ್ಷದ ಸಂಭ್ರಮ: ಗುಲಾಬಿ ಬಣ್ಣದ ಬೆಳಕಿನಲ್ಲಿ ವಿಧಾನಸೌಧ, ಮೈಸೂರು ಅರಮನೆ..!

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,29,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯ ಸರ್ಕಾರದ ಗ್ಯಾರಂಟಿ ಯೋಜನೆಗಳಲ್ಲೊಂದಾದ ಗೃಹ ಲಕ್ಷ್ಮಿಗೆ...