24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

“ரஷ்ய எண்ணெய் கொள்முதல்; இந்தியாவை விட சீனாவே அதிகம்'' – டிரம்புக்கு ஜனநாயகக் கட்சி கண்டனம்

Date:

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதுதான் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவீத சுங்கவரி விதித்துள்ளார்.

இது இந்தியா – அமெரிக்கா உறவுகளைப் பாதிக்கக் கூடும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“ரஷ்ய எரிபொருளை அதிகம் வாங்கும் சீனாவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியா மீது மட்டும் கவனம் செலுத்துவது கண்டிக்கத்தக்கது.

இந்தியா மீதான நடவடிக்கை உக்ரைன் தொடர்பான விவகாரம் அல்ல என்பதையே இது காட்டுகிறது” எனக் குறிப்பிட்டு, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அந்தக் கட்டுரையில்,
“ரஷ்ய எரிபொருளை வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தால் அது வேறு விஷயம்.

ஆனால் ரஷ்ய எரிசக்தியின் மிகப்பெரிய இறக்குமதியாளரான சீனாவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியா மீது மட்டும் கவனம் செலுத்துவது குழப்பமான ஒரு முடிவாகும்.

தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் சீனா இதுவரை அமெரிக்காவின் விமர்சனத்திலிருந்து தப்பித்திருக்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “உக்ரைன் போர் என்பது மோடியின் போர்” என வெளிப்படையாக விமர்சித்தது கவனிக்கத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Off The Record: నామినేషన్ల వరకు హడావుడి.. ఆ తర్వాత హ్యాండ్సప్‌.. సీన్‌లోకి వస్తారనుకుంటే సైలెంట్ అయ్యారా?

Off The Record: అంతన్నారింతన్నారు. మీకెందుకు మేం చూసుకుంటామంటూ ముందుకు తోసేశారు....

വെടിനിര്‍ത്തലിന് മധ്യസ്ഥത വഹിച്ച് മെലാനിയ ട്രംപ്: ഉക്രൈന്‍ നഗരം നാശത്തിന്റെ വക്കിലെന്ന് റിപ്പോര്‍ട്ട്

വാഷിങ്ടണ്‍: റഷ്യന്‍ അധിനിവേശത്തിലുള്ള ഒലഷ്‌കി നഗരത്തില്‍ റഷ്യയും ഉക്രൈനും തമ്മില്‍ വെടിനിര്‍ത്തല്‍...

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ்

"பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து...

Shreyas Iyer: అతడో అద్భుతం.. నమన్ ధీర్‌పై కెప్టెన్ ప్రశంసలు..!

Shreyas Iyer: న్యూజిలాండ్‌తో తొలి టీ20లో రికార్డు లక్ష్యాన్ని ఛేదించిన తర్వాత...