30
August, 2026

A News 365Times Venture

30
Sunday
August, 2026

A News 365Times Venture

ஆண்டிபட்டி திமுக MLA-வைத் திட்டிய MP தங்கதமிழ்செல்வன்; மேடையில் கடும் வாக்குவாதம்; என்ன நடந்தது?

Date:

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழாவில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டனர்.

முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததைப் பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், புரோட்டாகால்படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதோடு, மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனைத் திட்டினார்.

எம்எல்ஏ மகாராஜன் மற்றும் எம்பி தங்கதமிழ்செல்வன்

தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த மகாராஜன், நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, “நான்தான் வழங்குவேன்” என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கியதால் கோபமடைந்த தங்கதமிழ்செல்வன், தரக்குறைவாக எம்எல்ஏ மகராஜனைத் திட்டினர்.

இதனால் இருவருக்குமிடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் முன்பு சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

எம்எல்ஏ மகாராஜன் மற்றும் எம்பி தங்கதமிழ்செல்வன்

இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇസ്രഈലി സ്ഥാപനവും വോക്‌സ്‌വാഗണും തമ്മിലെ സഹകരണം; കരാറിനെതിരെ ജര്‍മനിയില്‍ ഇടത് പാര്‍ട്ടികളുടെ പ്രതിഷേധം

ബെര്‍ലിന്‍: ഇസ്രയേല്‍ സര്‍ക്കാറിന്റെ ഉടമസ്ഥതയിലുള്ള പ്രതിരോധ സ്ഥാപനവുമായി സഹകരിക്കാനുള്ള വോക്‌സ്‌വാഗന്റെ നീക്കത്തിനെതിരെ...

ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கபட வாய்ப்புள்ளதாக...

“ಗೋದಿ ಮೀಡಿಯಾ “ ಟ್ಯಾಗ್‌ ಲೈನ್‌ ಕಳಚಲು ಸಾಮಾಜಿಕ ಹೊಣೆಗಾರಿಕೆಯಿಂದ ಕಾರ್ಯ ನಿರ್ವಹಿಸಿ: ಡಾ.ಯತೀಂದ್ರ.

  ಮೈಸೂರು, ಆ.29, 2026:  ದೇಶದಲ್ಲಿ ಮಾಧ್ಯಮದ ವಿಶ್ವಾಸಾರ್ಹತೆ ಕುರಿತು ಪ್ರಶ್ನೆಗಳು...