3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' – முழு விவரம்!

Date:

‘அன்புமணி நடைபயணம்..’

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க…’ என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார்.

அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரின் மகனான அன்புமணி ராமதாஸூக்கும் இடையேயான மோதல் இன்னும் ஓயவில்லை. அன்புமணி மீது ராமதாஸ் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தன்னுடைய பெயரையே அன்புமணி பயன்படுத்தக் கூடாது என கடுமையாகவும் பேசியிருந்தார்.

‘ராமதாஸ் புகார்…’

இந்நிலையில்தான் ‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி நடத்தவிருந்த 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என ராமதாஸ் தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அன்புமணி
அன்புமணி

ராமதாஸ் அளித்த மனுவை தொடர்ந்து இப்போது அன்புமணியின் நடைபயணத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வழிபட்டுவிட்டு இன்றுதான் அன்புமணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.

‘அனுமதி மறுப்பு…’

டிஜிபியின் கடிதம்
டிஜிபியின் கடிதம்

100 வது நாளில் தர்மபுரியில் நடைபயணத்தை முடிப்பதுதான் திட்டம். இந்நிலையில்தான் இப்போது அன்புமணியின் இந்த நடைபயணத்துக்கு எந்த மாவட்ட எஸ்.பியும் அனுமதி வழங்கக்கூடாதென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

തെരഞ്ഞെടുപ്പ് കഴിഞ്ഞു, ബി.ജെ.പി തനിനിറം കാണിച്ചു; പാചകവാതക വിലവര്‍ധനവില്‍ പ്രതിഷേധത്തിന് ആഹ്വാനവുമായി സി.പി.ഐ.എം

  തിരുവനന്തപുരം: വാണിജ്യ പാചകവാതക വില കുത്തനെ കൂട്ടിയ കേന്ദ്ര സര്‍ക്കാര്‍...

Playoff Venues: ఐపీఎల్ ప్లే ఆఫ్ వేదికలపై కీలక అప్‌డేట్.. ఇంపాక్ట్ ప్లేయర్ రూల్‌కు చరమగీతం..?

ఐపీఎల్ 2026 ప్లేఆఫ్స్ వేదికలు, వివాదాస్పద ‘ఇంపాక్ట్ ప్లేయర్’ రూల్‌పై బీసీసీఐ...

ಕಲಬುರಗಿ ಡಿಸಿ ಸೇರಿ ನಾಲ್ವರು IAS ಅಧಿಕಾರಿಗಳ ವರ್ಗಾವಣೆ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,2,2026 (www.justkannada.in): ಕಲಬುರಗಿ ಜಿಲ್ಲೆ ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿಯಾಗಿದ್ದ ಫೌಜಿಯಾ ತರಣಮ್ ಬಿ...