29
April, 2026

A News 365Times Venture

29
Wednesday
April, 2026

A News 365Times Venture

“நான் தான் பாமக தலைவர்..'' – தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதிய ராமதாஸ்

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு முடிந்தப்பாடில்லை.

கடந்த 5-ம் தேதி, தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியில் இருந்து அன்புமணியின் பெயரும், அவரது ஆதரவாளர்களின் பெயரும் நீக்கப்பட்டது.

இதன் பின்னர், ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்து, அன்புமணி பெயர் நீக்கப்பட்டது.

ராமதாஸ், அன்புமணி

கடந்த 8-ம் தேதி, ராமதாஸ் தலைமையில் ஓமந்தூரில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட பலரும், அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.

மேலும், பாமகவில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸிற்கே உள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸிற்கே முழு அதிகாரம் உள்ளது போன்ற 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அன்புமணியின் தலைவர் பதவி கடந்த மே மாதம் 28-ம் தேதியோடு முடிந்தது. இதன் பின்னர், மே 29-ம் தேதி அன்று ராமதாஸ் அந்தப் பதவியில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், ராமதாஸ் இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தான் பாமகவின் தலைவர் என்றும், கட்சியின் சின்னத்தை அவர் தான் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇറാന്‍ ബുദ്ധിപൂര്‍വം പെരുമാറണം, പെട്ടന്ന് കരാറിലെത്തണമെന്ന് തോക്കുമായി ട്രംപ്; തുറമുഖങ്ങള്‍ക്കെതിരായ ഉപരോധം നീട്ടാന്‍ യു.എസ്

വാഷിങ്ടണ്‍: ഇറാന്‍ ഭരണകൂടം എത്രയും വേഗം കരാറിലെത്തണമെന്ന് അമേരിക്കന്‍ പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ്...

‘மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை!’ – செந்தில் பாலாஜி சொல்லும் விளக்கம்

மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு...

Kerala Election Exit poll 2026: కేరళలో హస్తం హవా.. పినరయికి గుడ్ బై..

Kerala Elections Exit poll 2026: నాలుగు రాష్ట్రాలు, ఒక కేంద్రపాలిత...

ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಬಿರುಗಾಳಿ ಸಹಿತ ಭಾರೀ ಮಳೆ: ಜನಜೀವನ ಅಸ್ತವ್ಯಸ್ತ

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,29,2026 (www.justkannada.in):  ಬಿಸಿಲಿನ ತಾಪದಿಂದ ಬಸವಳಿದಿದ್ದ ರಾಜ್ಯ ರಾಜಧಾನಿ ಬೆಂಗಳೂರಿನ...