24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

`திமுக மீது மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்; 2026 தேர்தலில் பரிசு…' – எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

Date:

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து நான் ஏற்கெனவே விளக்கம் கொடுத்து விட்டேன்.

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார். அதற்காக அதிமுக ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து நேற்றே விளக்கம் அளித்துவிட்டோம்.

ஒவ்வொரு  அமைப்பும் அவரவர் விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. அந்த அடிப்படையில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என அமித் ஷா சொல்லியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து.

அமித்ஷா
அமித்ஷா

அதேநேரத்தில் அனைவருக்கும் தாய் மொழி முக்கியம் என்பதையும் அவர் கூறியுள்ளார். தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார்.

திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தும், அவதூறு தகவல்ககளை பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

திமுக
திமுக

இதற்கு எல்லாம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த தண்டனையை அவர்களுக்கு பரிசாக வழங்குவார்கள். யோகா உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. பிரதமர் யோகாவை முன்னெடுத்து செல்வதற்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ട്രംപ്-ഷി ധാരണയ്ക്ക് പിന്നാലെ ഏഷ്യയില്‍ സ്വാധീനം ശക്തമാക്കാന്‍ ചൈന

ബീജിങ്: അമേരിക്കന്‍ പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപും ചൈനീസ് പ്രസിഡന്റ് ഷി ജിന്‍പിങ്ങും...

“ஈரானைத் தவிர்க்க ‘IMEC’ பொருளாதாரப் பாதை" – முழு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்

மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் கடல்வழித் தாக்குதல்களை...

Mamata Banerjee: బెంగాల్‌లో మళ్లీ ఎన్నికలు, జ్ఞానేశ్ కుమార్‌ అరెస్టు.. మమత సంచలన డిమాండ్..

Mamata Banerjee: కేంద్ర ఎన్నికల సంఘం నిర్వహించిన స్పెషల్ ఇంటెన్సివ్ రివిజన్(SIR)పై...

കേരളത്തില്‍ സി.ജെ.പിയുടെ ഫ്യൂച്ചര്‍ പ്ലാന്‍: ഏതെല്ലാം വിഷയം ഏറ്റെടുക്കും, സ്‌കൂള്‍ ഠീക് കരോ എവിടെയെല്ലാം

കോക്രോച്ച് ജനതാ പാര്‍ട്ടി (സി.ജെ.പി) രാജ്യത്താകെ അവരുടെ പ്രവര്‍ത്തനം വ്യാപിപ്പിക്കാനൊരുങ്ങുകയാണ്. ഇതിന്റെ...