20
September, 2026

A News 365Times Venture

20
Sunday
September, 2026

A News 365Times Venture

Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

Date:

டிக்கெட் முன்பதிவா… வங்கி சம்பந்தமான ஏதேனும் விஷயமா… இப்படி எந்த விஷயத்திற்கு சென்றாலும், இந்தியாவில் முதலில் கேட்கப்படும் ஆவணம் ‘ஆதார்’. ஆனால், எப்போதும் ஆதார் நம் கையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பிரச்னைக்கு வரப்போகிறது ஒரு புதிய தீர்வு.

ஜெராக்ஸ் வேண்டாமே!

வரும் வாரங்களில் UIDAI புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆப் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்களது ஆதாரை சமர்ப்பிக்க முடியும்.

ஆதார்

இந்த ஆப்பில் ஆதார் கியூ.ஆர் கோடு வடிவில் இருக்கும். அதை ஸ்கேன் செய்தால் ஆதாரை சமர்பித்து விட முடியும். இதனால், இனி ஆதார் காப்பிகளை எடுக்க ஜெராக்ஸ் கடைகளைத் தேடி அலைய வேண்டாம்.

ஆதார் இருவகை

ஸ்கேன் செய்து சமர்ப்பிப்பதிலும் இரு ஆப்ஷன்கள் உண்டு. ஆதார் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதில் நம்முடைய அனைத்து தகவல்களும் இருக்கிறது. அப்போது அதை எவ்வளவு பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும்? இதை எளிதாக்குவது போல, நீங்கள் ஆதாரை சமர்ப்பிக்கும் போது, அது முழுமையாக வேண்டுமா… மாஸ்க்டாக (Masked) வேண்டுமா என்று நாமே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

மேலும், இனி வீட்டிலேயே ஆதார் அப்டேட்டுகளை சில கிளிக்குகளில் எளிதாக செய்துகொள்ளலாம். வரும் நவம்பர் முதல் பெயர், முகவரி, போன் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை உரிய சான்றுகள் கொடுத்து அப்டேட் செய்யலாம்.

கைரேகை மற்றும் கருவிழி பதிவிற்கு மட்டும் ஆதார் சென்டர்களுக்கு சென்றால் போதும்.

எதற்காக இது?

இந்த வசதி மூலம் நீண்ட நேரம் காத்திருப்பு மற்றும் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. மேலும், யாருக்கு எந்தத் தகவல் கொடுத்தல் போதும் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ನಮ್ಮ ನಗರ ಸ್ವಚ್ಛವಾಗಿಡುವ ಕೈಗಳಿಗೆ ಆರೋಗ್ಯದ ಕಾಳಜಿ: ಪೌರಕಾರ್ಮಿಕರಿಗೆ ಉಚಿತ ಆರೋಗ್ಯ ತಪಾಸಣೆ”

  ಮೈಸೂರು, SEP.20,2026: ನಗರದ ಸ್ವಚ್ಛತೆ ಹಾಗೂ ಸಾರ್ವಜನಿಕ ಆರೋಗ್ಯಕ್ಕಾಗಿ ಪ್ರತಿದಿನವೂ...

റോഡില്ലെങ്കില്‍ വോട്ടില്ലെന്ന് നാട്ടുകാര്‍; ആവശ്യങ്ങള്‍ അപേക്ഷയായി മുന്നോട്ട് വെക്കണമെന്ന് കേന്ദ്രമന്ത്രി: പ്രതിഷേധം

  ഗുണ: റോഡ് നിര്‍മാണം വൈകുന്നതില്‍ പ്രതിഷേധിച്ച് കേന്ദ്രമന്ത്രി ജ്യോതിരാദിത്യ സിന്ധ്യയുടെ...

“தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன" – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ்...

Garba Row: గర్బాలో ముస్లింల ఎంట్రీపై వివాదం.. నుదిటిపై తిలకం తప్పనిసరి!

Garba Row: ముంబైలో బోరివలిలో జరుగుతున్న భారీ గర్బా కార్యక్రమంలో ముస్లింల...