13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

`ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' -உசுப்பேற்றிய பாக்., ராணுவ தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

Date:

மீண்டும் மீண்டும் இந்தியா மறுத்தும், ‘நான் தான் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வைத்தேன்’ என்று கூறி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

நேற்று நடந்த இந்திய பிரதமர் மோடி – ட்ரம்ப் போன்காலில், ‘அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை. இந்தியா இதுவரை எந்த மத்தியஸ்தையும் ஏற்றதில்லை… இனியும் ஏற்காது’ என்று தெரிவித்தப் பின்னும், ட்ரம்ப், ‘நான் தான்’ மத்தியஸ்தம் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த இத்தனைக்கும் பின்னால் இருப்பது, ட்ரம்பின் ‘நோபல் பரிசு ஆசையோ’ என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அசிம் முனீர்

அசிம் முனீரின் அமெரிக்கப் பயணம் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15), அரசு பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். அங்கே அவர் பேசும்போது, ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததால் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இதில் திளைத்துப்போய், நேற்று வெள்ளை மாளிகையில் அசிம் முனீருக்கு விருந்து கொடுத்துள்ளார் ட்ரம்ப்.

அசிம் முனீர் பயணத் திட்டத்தில் முன்பு ட்ரம்ப் சந்திப்பு சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவரது நோபல் பரிசு பரிந்துரைக்கு பிறகு, ட்ரம்ப் அவருக்கு விருந்தே கொடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகை சொல்வது என்ன?

இதை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லியே உறுதிபடுத்தி இருக்கிறார். அவர் ட்ரம்ப் – அசிம் முனீரின் சந்திப்பிற்கு முன் அன்னா கெல்லி கூறியிருப்பதாவது,

ட்ரம்ப்
ட்ரம்ப்

“இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்க இருந்து அணு ஆயுதத் தாக்குதலை தடுத்ததற்கு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்கிற முனீரின் பரிந்துரையை அடுத்து முனீரை அதிபர் ட்ரம்ப் சந்திப்பார்”.

ஆக, அசிம் முனீர் சொன்ன ஒரு வார்த்தை அவருக்கு, ‘ட்ரம்ப் சந்திப்பு’ என்னும் ஜாக்பாட்டை பெற்று தந்துள்ளது. மேலும், இதன் மூலம் ட்ரம்புக்கு நோபல் பரிசு ஆசை உள்ளது என்பதும் உறுதியாகி உள்ளது. .

‘ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!’ – நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்க மக்களே!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇന്ധനക്ഷാമമില്ല, എല്‍.പി.ജി ഉത്പാദനം 28% വര്‍ധിപ്പിച്ചു; വ്യാജപ്രചരണം വേണ്ട: ഹര്‍ദീപ് സിങ്

ന്യൂദല്‍ഹി: ഇന്ത്യയിലെ ഊര്‍ജ ഇറക്കുമതി സുരക്ഷിതമായി തുടരുകയാണെന്ന് പെട്രോളിയം മന്ത്രി ഹര്‍ദീപ്...

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில்...

Lifetime Achievement Award: ‘ది వాల్’ రాహుల్ ద్రావిడ్ కు అరుదైన గౌరవం..

Lifetime Achievement Award: భారత మాజీ క్రికెటర్, మాజీ టీమిండియా కోచ్,...