3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

'நான்தான் மத்தியஸ்தம் செய்தேன்' – ரிப்பீட் மோடில் ட்ரம்ப்; மோடியிடம் கேள்விகளை அடுக்கும் ப.சிதம்பரம்

Date:

நேற்று காலை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசி அழைப்பில், ‘இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்த மத்தியஸ்தையும் செய்யவில்லை’ என்று கூறியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

ஆனால், ட்ரம்போ ‘நான் தான்’ இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நிறுத்தத்தை செய்தேன் என்று ரிப்பீட் மோடில் மீண்டும் கூறியிருக்கிறார்.

இது குறித்து கேள்வி எழுப்பி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது…

பிரதமர் மோடி – டொனால்டு ட்ரம்ப்

‘போரை நிறுத்தியது யார்?’

‘போரை நிறுத்தியது யார்?’ என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது.

39 நாள்கள் கழித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து, போரை நிறுத்தியதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி தொலைபேசி அழைப்பில் ட்ரம்பிடம், ‘இந்தியா எந்த ஒரு மத்தியஸ்தையும் இதுவரையும், இனியும் ஏற்காது’ என்று கூறியிருக்கிறார்.

பல முறை தொடர்ந்து கூறி வரும் ட்ரம்பின் கூற்றை மறுக்க ஏன் 39 நாள்கள் ஆனது?

தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, இது குறித்து மோடி ஏன் நேரடியாக இந்திய மக்களிடமோ, இந்திய நாடாளுமன்றத்திலோ தெரிவிக்கவில்லை.

தொலைபேசி அழைப்பு முடிந்த சில மணிநேரத்திலேயே, ட்ரம்ப் மீண்டும் அதை கூறியுள்ளார். மேலும், ‘போர் நிறுத்தத்திற்கு உதவினார்கள்’ என்று ட்ரம்ப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீரை சமமாக பேசியுள்ளார்.eன

ட்ரம்ப் அவருக்கு பாகிஸ்தானை பிடிக்கும் என்று கூறியுள்ளார் மற்றும் ஜெனரல் அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் மதிய உணவு விருந்து கொடுக்கப்பட்டதாகவும் பிரஸ் ரிலீஸ் வெளியாகி உள்ளது.

ட்ரம்ப் மீண்டும் இதை தொடர்ந்து முன்வைத்தால், பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் சம்பந்தமான விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா உடனோ அல்லது அதன் வெளியுறவுத் துறையுடனோ எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவதை மறுக்குமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മാപ്പ് മാപ്പ് മാപ്പ്; സവര്‍ക്കര്‍ ബ്രിട്ടീഷ് ഭരണകാലത്ത് അഞ്ച് തവണ മാപ്പപേക്ഷ നല്‍കിയിരുന്നു: ചെറുമകന്‍

ന്യൂദല്‍ഹി: തീവ്ര ഹിന്ദുത്വവാദിയായ സവര്‍ക്കര്‍ ബ്രിട്ടിഷ് ഭരണകാലത്ത് അഞ്ച് തവണ മാപ്പപേക്ഷ...

Donald Trump: జర్మనీకి డబుల్ షాక్ ఇచ్చిన ట్రంప్..

Donald Trump: అమెరికా అధ్యక్షుడు జర్మనీ టార్గెట్ చేసుకుంటోంది. డొనాల్డ్ ట్రంప్...

50 ಸಾವಿರ ಲಂಚ ಸ್ವೀಕರಿಸುವಾಗ ಲೋಕಾಯುಕ್ತ ಬಲೆಗೆ ಸರ್ವೇ ಸೂಪರ್ ವೈಸರ್

ದಾವಣಗೆರೆ,ಮೇ,2,2026 (www.justkannada.in):  50 ಸಾವಿರ ಲಂಚ ಸ್ವೀಕರಿಸುತ್ತಿದ್ದ ವೇಳೆ ಸರ್ವೇ...